சந்தன'முல்லை
கிள்ளிவைத்த உன்
ஒரு கன்னத்து குழி அழகு
விடாது சிரிக்கின்ற
முல்லை பூ பற்கள் அழகு
தோளினை தொடாத
உன் கார்கூந்தல் அழகு
உன் பப்புவின் பதிவுகள் அழகு
அது தினமும் வருவது அழகு
உன் அமைதி அழகு ஆனால்
என்னிடமும் உன் பொறுமை அளவற்ற அழகு
இணையத்தில் நீ எனக்கு
இன்னுமொரு "டார்லிங்"
எல்லாவற்றையும் விட..
பப்புவின் அம்மாவாக
எப்போதும் நீ அழகு
எல்லோரையும் விட நீ அழகு
இதயத்திலிருந்து ..
இந்த அழகை இன்னமும் எப்படி
வருணிப்பது என்று அறியாமல்
கவிதா......
41 - பார்வையிட்டவர்கள்:
:)-
பப்புவின் அம்மாவாக
எப்போதும் நீ அழகு
கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன்
:-) நன்றி கவிதா...
உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது..மகிழ வைக்கிறது!
ஹ்ம்ம்..இதுக்கு மேல முடியலை..!!
ithu pappuvai patriya kavithai illayaa :(
pappu peravai
:-) நன்றி கவிதா...
உங்கள் அன்பு நெகிழ வைக்கிறது..மகிழ வைக்கிறது!
ஹ்ம்ம்..இதுக்கு மேல முடியலை..!!//
ஹல்லோ இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது நான் நெகிழ எல்லாம் மாட்டேன்.. பேசினபடி சன்மானம் வந்து சேரனும் சரியா :)))
//விடாது சிரிக்கின்ற
முல்லை பூ பற்கள் அழகு
தோளினை தொடாத
உன் கார்கூந்தல் அழகு//
இப்படிக் காட்டிக் கொடுத்திட்டீங்களே மேடம்..:-))
//என்னிடமும் உன் பொறுமை அளவற்ற அழகு
இணையத்தில் நீ எனக்கு
இன்னுமொரு "டார்லிங்"//
கவிதா..என்ன சொல்றதுன்னு தெரியலை..ஆனால் மகிழ்ச்சியாக உண்ர்கிறேன்!! :-)
ithu pappuvai patriya kavithai illayaa :(
pappu peravai//
ஆயில்யன், ஆமா பப்புவை பற்றிய கவிதை இல்லைதான்..!!
கவிதையும் அழகு ;)
கவிதா..என்ன சொல்றதுன்னு தெரியலை..ஆனால் மகிழ்ச்சியாக உண்ர்கிறேன்!! :-)//
ம்ம் ..நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் செய்தா போதும்.. (சன்மானம்) ... :)
supera iruku kavithai :)
//கவிதா | Kavitha said...
ஹல்லோ இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது நான் நெகிழ எல்லாம் மாட்டேன்.. பேசினபடி சன்மானம் வந்து சேரனும் சரியா :)))//
வேண்டுமானால் வேளச்சேரியையும் அதன் சுற்றுப்புறங்களையும் தாங்கள் விரும்பும் பட்சத்தில் எடுத்துக் கொள்ளலாம்!
தற்போதைய நிதிநிலைமையை தலைமைப் புலவி கருத்தில் கொள்ளவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்!!
பி.கு:
பொன்னாடை கூரியரில் வருகிறது..:-)))
//வேண்டுமானால் வேளச்சேரியையும் அதன் சுற்றுப்புறங்களையும் தாங்கள் விரும்பும் பட்சத்தில் எடுத்துக் கொள்ளலாம்!//
ஓஹோ! போயஸ் கார்டனுக்குப் போட்டியா வேளச்சேரியா?
உங்களுக்கு அவங்க கிட்ட என்ன வேணும்னு நேராவே கேட்டிருக்கலாம்:)
கவிதாக்காவை தலைகீழா கட்டிவெச்சி மூக்குல மூக்குப் போடியெல்லாம் போடுவீங்களா?
// Namakkal Shibi said...
கவிதாக்காவை தலைகீழா கட்டிவெச்சி மூக்குல மூக்குப் போடியெல்லாம் போடுவீங்களா?//
நாங்க அன்பாலதான் கட்டி வச்சிருக்கோம்..நேராவே!! :-))
ஆனா மூக்குப்பொடி தான் எதுக்குன்னு புரியலை அண்ணா!?!
கவிதாக்காவை தலைகீழா கட்டிவெச்சி மூக்குல மூக்குப் போடியெல்லாம் போடுவீங்களா?//
சிபி, உங்க கன்னத்தில் கூட குழி விழுகிறது்' உங்களுக்கும் பிற்காலத்தில் இப்படி ஒரு கவிதை வர வாய்பிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
[நிறைய பேரு அதை பல் இல்லாமல் இருக்கறதால் ன்னு சொன்னங்க, தெளிவாக சொன்னால் "பொக்கை வாய்" :))))]
உங்களுக்கு அவங்க கிட்ட என்ன வேணும்னு நேராவே கேட்டிருக்கலாம்:)//
அப்படி எல்லாம் கேட்டு கிடைக்காததால் தான் இந்த கவிதை :)
பி.கு:
பொன்னாடை கூரியரில் வருகிறது..:-)))//
பொன்' ஆடை ன்னா.. அதுல பொன் இருக்கும் இல்ல???
ஓஹோ! போயஸ் கார்டனுக்குப் போட்டியா வேளச்சேரியா?//
ஏன்ன்ன்ன்ன்ன்?? எதாவது பிரச்சனைன்னா தனியா பேசி தீர்த்துக்களாம் ..எதுக்கு?!!
கவிதா கவிதை நல்லா இருக்கு .
அதை விட மத்தவங்க பின்னூட்டத்துக்கு உங்க சமாளிப்பு சூப்பரோ சூப்பருங்க.என்னமா எழுதறாங்கப்பா எல்லாரும்.கலக்குங்க...கலக்குங்க.
//கவிதா | Kavitha said...
பொன்' ஆடை ன்னா.. அதுல பொன் இருக்கும் இல்ல???
//
என் பொன்னான கரங்களினால் அனுப்புவதால் பொன்னாடை! பொன் போன்ற தங்கள் நட்பை கவுவிப்பதால் பொன்னாடை!! எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பொன் இன்னொரு பொன்னுக்கு அளிப்பதால் பொன்னாடை!!
ஓக்கே..நோ கன்ஃபியூஷன்!! (அப்பாடா சமாளிச்சாச்சு!!)
அணிலு,
பொன்வண்டு-ல பொன் இருக்குமா? இல்ல
பொன்வண்டு சோப்பில தான் பொன் இருக்குமா? :-))
அட தோழிக்காக ஒரு கவிதையா
எங்க அணில காணோம்
\\ Poornima Saravana kumar said...
உங்களுக்கு அவங்க கிட்ட என்ன வேணும்னு நேராவே கேட்டிருக்கலாம்:)\\
நானும் மருக்கா கூவிக்கிறேன்.
முதன் முறையாக முல்லை அக்கா ஒன்றுக்கும் மேற்பட்ட கமெண்ட்கள் பார்க்கிறேன்.
//இதயத்திலிருந்து ..
இந்த அழகை இன்னமும் எப்படி
வருணிப்பது என்று அறியாமல்//
அறியாமலே இந்த சலம்பலா? அறிந்தால்.. இந்த பதிவுலகம் தாங்காது டா சாமி
கவிதா கவிதை நல்லா இருக்கு .
அதை விட மத்தவங்க பின்னூட்டத்துக்கு உங்க சமாளிப்பு சூப்பரோ சூப்பருங்க.என்னமா எழுதறாங்கப்பா எல்லாரும்.கலக்குங்க...கலக்குங்க.//
நன்றி டவுட்...என்ன செய்றது சமாளிக்கும் போது நம்மை தலைகீழா தொங்கவச்சி மூக்குபொடி போட எல்லாம் ஆள் இருக்கு இங்க...:))
அட தோழிக்காக ஒரு கவிதையா//
ம்ம்..ஆமா ஜமால்..!! :)
//என் பொன்னான கரங்களினால் அனுப்புவதால் பொன்னாடை! பொன் போன்ற தங்கள் நட்பை கவுவிப்பதால் பொன்னாடை!!//
ம்ம் :)) அப்புறம்....!! :)
//எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பொன் இன்னொரு பொன்னுக்கு அளிப்பதால் பொன்னாடை!!
//
அய்யய்யோ!! முல்லை என்னால முடியலையேஏஏஏஏஏ.... !!
இந்த போஸ்ட் போடற வரை நல்லாத்தானே இருந்தீங்க...:)
//அணிலு,
பொன்வண்டு-ல பொன் இருக்குமா? இல்ல
பொன்வண்டு சோப்பில தான் பொன் இருக்குமா? :-))//
டேய்!! இப்படி எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகக்கூடாது...!! அணிலு விடாத பிடி ஆச்சிய...!! :)
//இதயத்திலிருந்து ..
இந்த அழகை இன்னமும் எப்படி
வருணிப்பது என்று அறியாமல்//
அறியாமலே இந்த சலம்பலா? அறிந்தால்.. இந்த பதிவுலகம் தாங்காது டா சாமி//
:))) தாங்காதுன்னு தான் இதோட நிறுத்திக்கிட்டேன்..
சரி..சலம்பல்'னா? என்ன? நாகை தமிழா இது..?
super:) super:) super:)
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
சும்மாவே முல்லை தும்மினா கூட அவங்களுக்கு 100 கமெண்ட்டு வருது. இதுல கன்னத்துல குழி, முல்லைப்பூ பற்கள்ன்னு.. அடங்க மாட்டிங்க போல!!!
அணிலு, ஒரு டவுட்டு... முல்லைப்பூ பற்கள்ன்னா எப்டி இருக்கும்? மாலையிலே பூத்து காலையிலே வாடிடுமோ!!!
அணிலு, ஒரு டவுட்டு... முல்லைப்பூ பற்கள்ன்னா எப்டி இருக்கும்? மாலையிலே பூத்து காலையிலே வாடிடுமோ!!!//
ராஜா, அதுக்கு எதுக்கு அணிலை கூப்பிடறீங்க "எங்க முல்லை எப்பவும் வாடாத முல்லை" ங்க...
ப்ளீஸ் நோ காதுல புகை..!! ஓகே.. :)
//சும்மாவே முல்லை தும்மினா கூட அவங்களுக்கு 100 கமெண்ட்டு வருது. இதுல கன்னத்துல குழி, முல்லைப்பூ பற்கள்ன்னு.. அடங்க மாட்டிங்க போல!!!/
ஏன் கேவிஆர் ஏன்??
..எதுக்கு இந்தப் பொறாமை?! உண்மையைதானே சொன்னாங்க..நோ டென்ஷன்..ஓக்கே! :-))
//நோ டென்ஷன்..ஓக்கே! :-))//
சே சே டென்ஷனெல்லாம் இல்லை முல்லை. வலையுலகில் ஒருவரை பாராட்டி மற்றொருவர் கவிதை எழுதுவது பெருமையா தான் இருக்கு...
ஒ இந்தக் கவிதைய நான் பார்க்கலையே.. சூப்பரேய்.. அதுக்கு வந்த பின்னூட்டங்கள் அதைவிட சூப்பர் ..வல்லவனுக்கு வல்லவனாக ..வல்லவிக்கு வல்லவியா எல்லாருமே அருமையா பின்னூட்டம்போட்டிருக்கீங்க.. :))
ஒ இந்தக் கவிதைய நான் பார்க்கலையே.. சூப்பரேய்.. அதுக்கு வந்த பின்னூட்டங்கள் அதைவிட சூப்பர் ..வல்லவனுக்கு வல்லவனாக ..வல்லவிக்கு வல்லவியா எல்லாருமே அருமையா பின்னூட்டம்போட்டிருக்கீங்க.. :))//
ஆமாம் முத்து, நீங்களும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க.. :)))
சே சே டென்ஷனெல்லாம் இல்லை முல்லை. வலையுலகில் ஒருவரை பாராட்டி மற்றொருவர் கவிதை எழுதுவது பெருமையா தான் இருக்கு..//
ராஜா இதுல ஏதும் உள்குத்து இருக்கா... ?!! :) சந்தேகமாவே இருக்கு... :)
//ராஜா இதுல ஏதும் உள்குத்து இருக்கா... ?!//
நோ உள்குத்து வெளிகுத்து. குத்தணும்ன்னு நினைச்சாலும் நேரா வந்து "குத்தப் போறேன்"ன்னு சொல்லிட்டு நச்சுன்னு மூக்குல ஒரு குத்து குத்திடுவோம் (திரும்ப கிடைக்கிறதையும் வாங்கிப்போம்), அவ்ளோ நல்லவங்க நாங்க...
Post a Comment