சந்தன முல்லை வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் என்ற தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள். இப்படி ஒரு தொடர் மிகவும் அவசியமானதாக தோன்றுகிறது. இதில் பதிவர்கள் நினைவில் வைத்து சொல்லும் எல்லா சொற்களையும் சேகரித்து சேமித்து வைக்கலாம்.
எனக்கு நினைவில் தெரிந்து என்னுடைய தாத்தா நல்ல தமிழ் பேசுவார்கள், ஆயா, அப்பா எல்லாம் அவ்வளவு சுத்த தமிழ் சொற்கள் உபயோகிக்க' வில்லை என்றே நினைக்கிறேன். உபயோகம் என்ற வார்த்தை அதிகமாக யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை.
இந்த பதிவில் குறிப்பாக எங்களது வீட்டில் என்னுடைய ஆயா, தாத்தா வழக்கில் வைத்து இருந்த சொற்களை நினைவு படுத்தி சொல்ல முயற்சி செய்கிறேன்.. இந்த சொற்கள் எதுவுமே என் மகனுக்கு சுத்தமாக தெரியாது.
வழக்கில் பயன்படுத்த மறந்த வார்த்தைகள் :-
அன்ன(ம்)வெட்டி - சாதம் எடுக்கும் கரண்டி, என் பையன் சாதம் எடுக்கும் கரண்டின்னு தான் சொல்றான்.. நானுமே..!
அன்ன(ம்)கூடை - சாதம் வைக்கும் பாத்திரம், இது ஆயாவீட்டில் இருந்தது என்னிடம் இல்லை.
கூஜா - தண்ணீர் வைக்கும் பாத்திரம் , இப்போது இந்த பாத்திரமும் இல்லை
களி - கேழ்வரகில் செய்யும் உணவு, செய்வதே இல்லை, யாரும் சொல்லுவதும் இல்லை.
கூழ் - கேழ்வரகில் செய்யும் உணவு, செய்வதே இல்லை, சொல்லுவதும் இல்லை.
நீராகாரம் - பழையசாதத்திலிருந்து எடுக்கும் தண்ணீர்.. காலையில் குடிக்க கொடுப்பார்கள், உடம்புக்கு ரொம்ப குளிர்ச்சி, சத்து என்று சொல்லுவார்கள்.
சொரபிஞ்சி :- இது உளுந்தை கொண்டு செய்யும் ஒரு உணவு, வடையை போன்று இருக்கும், ஆனால் காரம் இல்லை, வெறும் உளந்து ஊரவைத்து, அரைத்து (சின்ன அளவு) போண்டாவை போன்று உருட்டி எண்ணெயில் பொரித்து, தேங்காய் பால் எடுத்து அதில் போட்டு பரிமாறுவார்கள்.
உணவு பண்டம்:- பண்டங்கள்'ன்ன உணவை சார்ந்த பொருட்கள் ன்னு நினைக்கிறேன்.. என்ன அர்த்தம் என்றே மறந்து விட்டது
பதார்த்தம் :- சாப்பாட்டோடு தொட்டுக்கொள்ள வைக்கும் காய்கறிகள் பதார்த்தம். ஆனால் சொல்லுவதே இல்லை ..தொட்டக்க என்ன? என்று மாறியே போயிவிட்டது
நெப்பம் :- ரொம்ப சென்சிடிவ், soft, மெல்லிய, என்று பொருள்படும், என்னுடைய ஆயா அடிக்கடி சொல்லுவார்கள், நான் இப்போதும் சொல்லி என் கணவர் என்னை கிண்டல் அடிப்பார். "கண்ணாடிய ரொம்ப நெப்பமாக உபயோகிக்கனும், இல்லயென்றால் உடைந்துவிடும்"
புல்லாக்கு :- திருமணங்களில் மணப்பெண்ணுக்கு போடுவார்கள், மூக்கின் நடுவில் வைத்து இந்த புல்லாக்கை அழுத்திவிடுவார்கள், உதடுகளில் வந்து இடிக்கும். எனக்கு ரொம்ப பிடித்த ஒரு நகை :) என் கல்யாணத்தில் கேட்டு வாங்கிப்போட்டேன். இப்போது கிடைப்பதில்லை.
ஆபரணம் :- உடைகள், நகைகள்
பரிசம் : நிச்சயத்தார்தம்
துடுப்பு: பெரிய அண்டாக்களில் சமைக்கும் போது, இதை உபயோகிப்பார்கள், மரத்தினால் செய்யப்பட்ட நீளமான கரண்டி ஆனால் தோசை திருப்பி போல் நேராக இருக்கும், கரண்டி போன்று குழியாக இருக்காது.
கொட்டும்: தேள், பாம்பு எல்லாம் கொட்டும், ஆனால் இந்த வார்த்தையை சொல்லுவதே இல்லை, எதுவாக இருந்தாலும் கடிக்கும் என்றே சொல்லுகிறோம்.
காக்கை கரையும் : காக்கா கத்துகிறது என்று தான் சொல்லுகிறோம்.
உரு: படிக்கும் போது எல்லாம் தாத்தா சொல்லுவார்கள், நன்றாக பாடத்தை உரு அடி (மனப்பாடம்) செய் என்பார்கள். இதில் 'ரு' சரியா தெரியவில்லை.
பானம் : வெல்லத்தை கொண்டு செய்யும் ஜீஸ்.. ஆயாவிற்கு பிறகு யாருமே இதை செய்வது இல்லை.. மறந்தும் போய்விட்டேன்..
அறிவுகால் : வாசற்படியில் இருபுறமும் கதவுடன் இணைக்க பயன்படும் மரம்வேலைபாடு. வெள்ளிக்கிழமை ஆனால் மஞ்சல் பூசி பொட்டு வைத்து.. உம் எங்க.. செய்வதே இல்லை.. அறிவுகாலா அபபடின்ன்னா? கேட்கும் நிலைமை வந்துவிட்டது.
மாடம் : இது சின்ன ஷெல்ப் போன்று ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்கும் அளவிற்கு இருக்கும் விளக்கு அங்கு இருக்கிறதோ என்னவோ வீட்டின் எல்லா சாவிகளும் அங்கே தான் இருக்கும்.. அடிக்கடி வீட்டில் உபயோகிக்கும் வார்த்தை "மாடத்தில் பாரு இருக்கும்"
புறாக்கூண்டு : மர பீரோவில் உள்ளே பணம் நகைகள் வைக்கும் அறை.. இப்போது ஆசாரிகளுக்கு இதை சொன்னால் என்னவென்று கேட்கிறார்கள்.
கோவணம் : தாத்தா எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கோவணத்துடன் தான் குளிப்பார்.. ஹா ஹா.. இப்ப இதை எல்லாம் சொன்னால் வீட்டில் எனக்கு அடி விழும்.. !! :)
கைலி/லுங்கி : மறந்தே போன ஆண்கள் உடுத்தும் உடைகள்.என் பிள்ளைக்கு என்னவென்றே தெரியாது.. :(
அத்தான்: அம்மாவீட்டில் மாமா முறையை அத்தான் என்று தான் சொல்லுவார்கள், ஆனால் நானே பயன்படுத்தியதில்லை.. மறந்தே போனது..
தொட்டால் சிணுங்கி : எதற்கு எடுத்தாலும் கோபம், சாப்பிடாமல் இருப்பது, முகம் துவண்டு போவதால் எனக்கு ஆயா வைத்த பெயர்..
சாக்கு : காரணம் என்ற பொருள் படும் "இதான் சாக்குன்னு ஓடிடாது நில்லு"
புகைக்கூண்டு : சமையில் அறையின் புகை போக கட்டப்படும் கூண்டு சமையல் அறையில் இருந்து மெத்தை (மாடி்) வரை இருக்கும்.. ஒரு சின்ன அறை போன்றே கட்டுவார்கள்.
இன்னும் நிறைய இருக்கு யோசித்து சேர்த்து விடுகிறேன்... பதிவை தொடர அழைப்பது -
1. மங்கைஜி
2. சந்தோஷ்
3. நாகைசிவா
4. ராயல் ராம்
5. தெகாஜி
6. பூரணி சரன்
7. இனியவள் புனிதா
8. செந்தில்
அணில் குட்டி அனிதா:- ம்..ம்.. எனக்கு தூக்கம் வரூது.. என்னைய விடுங்க..!!
பீட்டர் தாத்ஸ் :- A winner is someone who sets his goal, commits himself to those goals, and then pursues them with all the ability he has.
மறந்துபோன தமிழ் சொற்கள்
Posted by : கவிதா | Kavitha
on 22:07
Labels:
பழம்-நீ
Subscribe to:
Post Comments (Atom)
29 - பார்வையிட்டவர்கள்:
வணக்கமுங்க! உங்களுக்கும் நன்றி, பூவையர் அல்லாருமா சேந்து, நல்ல நல்ல சொல்லுகள ஞாவகப் படுத்துறீங்க... மனசுக்கு நிறைவா இருக்கு! மேலதிகப் பதிவு நானும் போடுறேன். பண்டம்ன்னா, பொதுவா பொருட்களைக் குறிக்கும். உதாரணத்துக்கு, பண்டகசாலை(grocery store), பண்டந்தாங்கி(dining table), பண்டமாற்று(exchange), பண்டங்கன்னுக.
:)))))))))))))))))))))
அன்ன(ம்)கூடை,நீராகாரம்,பதார்த்தம்...எங்க வீட்டிலும் உபயோகிக்கும் வார்த்தைகள். ;)))
அருமை....அண்ண கரண்டி ; அண்ண கூடை எல்லாம் கல்யாண வீட்ல மட்டும் தன் கேட்க்க முடியும்...
அச்சச்சோ களி வழக்கொழிந்து போச்சா/.....அப்போ நான் போன வாரம் சாப்பிட்டது??
அருமையான பதிவு
நலாயிருக்கு\
அது சரி "கூஜா" என்பது தமிழ் வர்த்தையா????????
வாழ்த்துகள்
பல சொற்களைத் தங்களின் இடுகையின் வாயிலாகக் கற்றுக் கொண்டேன்.
அகப்பை, அன்ன கை, அன்னவாரி என்று சொல்ல கேட்டதுண்டு
அன்ன(ம்)வெட்டியா ?
அது புதுமையாக தான் உள்ளது.
மற்றச் சொற்கள் எல்லாம் அறிந்தது தான். " நெப்பம் " என்பது புதியதாக உள்ளது
இது ஒரு நல்ல தொடர் இடுகை.
பலரும் பல சொற்களை அறிந்துக் கொள்ளும் வாய்ப்பைத் தருகிறது
மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்
சொரபிஞ்சி
நெப்பம்
புல்லாக்கு
இவை எனக்கு புதியவை.
எழுதிருவோம்... :)
நலாயிருக்கு\
அது சரி "கூஜா" என்பது தமிழ் வர்த்தையா????????//
@ பிரபு ஆமா இல்ல?! தமிழான்னு எனக்கும் இப்பத்தான் சந்தேகம் வருது.. வேற வார்த்தை இருந்தா சொல்லுங்க..
---------------------------
@ பழமைபேசி..
//வணக்கமுங்க! உங்களுக்கும் நன்றி, பூவையர் அல்லாருமா சேந்து, நல்ல நல்ல சொல்லுகள ஞாவகப் படுத்துறீங்க...//
நன்றிங்க..!! :)
----------------------
@ புரணி சிரிச்சிட்டு போயிடப்பிடாது
எழுதனும் சரியா?!! :)
----------------------
//அன்ன(ம்)கூடை,நீராகாரம்,பதார்த்தம்...எங்க வீட்டிலும் உபயோகிக்கும் வார்த்தைகள். ;)))//
கோபி, அட எங்கவீடு மாதிரியே வா?
-----------------------
//அச்சச்சோ களி வழக்கொழிந்து போச்சா/.....அப்போ நான் போன வாரம் சாப்பிட்டது??
அருமையான பதிவு//
வாங்க நிலவும் அம்மாவும், நன்றி..
நாங்க சாப்பிட மட்டும் இல்ல செய்யவே மறந்துட்டோம்.. :(
-------------------------
@ திகழ்மிளிர் -
உங்கள் பெயருக்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா? புதிய பெயராக எனக்கு இருக்கிறது :)
//வாழ்த்துகள்
பல சொற்களைத் தங்களின் இடுகையின் வாயிலாகக் கற்றுக் கொண்டேன்.//
நன்றி.. :)
//அகப்பை, அன்ன கை, அன்னவாரி என்று சொல்ல கேட்டதுண்டு
அன்ன(ம்)வெட்டியா ?
அது புதுமையாக தான் உள்ளது.//
பாருங்க கோபி கூட சொல்றாங்க அவங்க வீட்டிலும் சொல்லுவாங்களாம்.
//மற்றச் சொற்கள் எல்லாம் அறிந்தது தான். " நெப்பம் " என்பது புதியதாக உள்ளது//
எனக்கு தெரிந்து எங்கள் வீட்டில் தான் அதுவும் ஆயா மட்டுமே பயன்படுத்துவார்கள் :)
அவர் சொல்லும் இன்னொரு வார்த்தை "கியாபகம்" - ஞாபகத்தை இப்படித்தான் சொல்லுவார்கள் :)
@ புனிதா
கவிதை மட்டுமே எழுதும் கைகளுக்கு வார்த்தைகளை எழுத சொல்லி அழைத்திருக்கிறேன்.. கண்டிப்பாக எழுதனும் சரியா?! :)
-------------------
@ ஜமால் -
சொரபிஞ்சி
நெப்பம்
இது இரண்டும் எங்கள் வீட்டு வார்த்தைகள் தான்..
@ புல்லாக்கு
இது நகையின் பெயராயிற்றே தெரியாதா?
-------------------------
@ ராம்.. எழுதலனா.. விட்டுடுவோமா..?? :)
மெத்தைய (மாடி) பயன் படுத்திட்டேன் பாருங்க.. :))
-------------------------
நல்ல பதிவு..நிறைய வார்த்தைகள்!!
//அன்ன(ம்)வெட்டி// இப்பவும் நாங்க உபயோகிக்கறோம்!
சொரபிஞ்சி,நெப்பம் : இது புதுசு!! நல்ல அறிமுகம்!
//பானம்// இது பானகம்-ன்னும் சொல்லுவாங்க!
//காக்கை கரையும் : காக்கா கத்துகிறது என்று தான் சொல்லுகிறோம்//
:-)))
//புல்லாக்கு// இது பத்தி அஜித் பாடியிருக்காரே..:-)
பல புதிய வார்த்தைகள்..மாடம்..இப்பல்லாம் அதுக்கு எங்கே இடம் இருக்கு?!! :-)
//அன்ன(ம்)வெட்டி
அன்ன(ம்)கூடை
களி
கூழ்
நீராகாரம்
கொட்டும்
கைலி//
சென்னையிலே இருப்பதால் உங்களுக்கு இந்த வார்த்தைகள் எல்லாம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை போல. இது எல்லாம் ரொம்ப சாதாரணமாக உபயோகப்படுத்து வார்த்தைகள் தான்.
அதிலும் கைலி(லுங்கி) தமிழ்நாட்டோட மாநில உடைங்க...
//அதிலும் கைலி(லுங்கி) தமிழ்நாட்டோட மாநில உடைங்க...//
சிவா கண்டிப்பா இல்லை.. இது கேரளாவின் உடை.. நம்முடையது வேட்டி, சட்டை சரியா..
//அன்ன(ம்)வெட்டி
அன்ன(ம்)கூடை
களி
கூழ்
நீராகாரம்
கொட்டும்
கைலி//
சென்னையிலே இருப்பதால் உங்களுக்கு இந்த வார்த்தைகள் எல்லாம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை போல. இது எல்லாம் ரொம்ப சாதாரணமாக உபயோகப்படுத்து வார்த்தைகள் தான்.//
சிவா நானுமே அன்னவெட்டி என்று தான் எங்க வீட்டுல சொல்லிவந்தேன்.. ஆனா காலப்போக்கில் அது மாறி சாதக்கரண்டின்னு சொல்ல ஆரம்பிச்சி.. இப்ப என் புள்ளைக்கு தெரியவே தெரியாது.. மறந்தே போச்சி..:)
////அதிலும் கைலி(லுங்கி) தமிழ்நாட்டோட மாநில உடைங்க...//
சிவா கண்டிப்பா இல்லை.. இது கேரளாவின் உடை.. நம்முடையது வேட்டி, சட்டை சரியா..//
மாநில உடை மாதிரி என்று கூற வந்தேன் பாதில தொங்கிடுச்சு. அதற்கு காரணம் முக்கால்வாசி பேர் கைலியுடன் வேலைக்கு வருவாங்க.
(சித்தாள், கொத்தனார், மீன் பிடிக்க செல்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், சுமை தூக்கும் தொழிலாளி இப்படினு கைலி அணிபவர்கள் அநேகம்.)
நீங்க சொல்வது போல் நடுத்தர மேல்தட்டு ஆண்கள் இரவில் கைலி உடுத்துவது சிறிது குறைந்து இருப்பதும் உண்மை தான்.
மறந்து போன சொற்களா...அது எக்கச்சக்கமா இருக்கே... ஆனா நாமளும் இல்ல மற்ந்துட்டோம்.. அதுல நான் முதல் ஆச்சே... ட்ரை பண்றேன்..
நிறைய சொல்லி இருக்கீங்க ...
நெப்பம்.. சொரப்பிஞ்சி எனக்கும் புதிது தான்..
//அன்ன(ம்)வெட்டி//
hehe... enga voota annakuthi nu solvom.. innikku varai :)
//அன்ன(ம்)கூடை //
Enga vootla annakoodainu basin maadiri irukkara oru paatharatha solvom.. adhu romba perusa irukkumae thanni pudichu veikka.. adhulaya saadham veipaanga ;)
//கூழ் //
Aadi maasam kovil pakkam ellam etti paakaradhae illa pola :) Enga veetla munnadi keda vetti koozh senju saamikku padaippaanga.. ippo recenta andha pazhakkam vittachu but still kezhvaragu koozh appapo seivom.. :)
Neenga solli irukkara listla naan pudhusa kelvipadum vaarthaigal..
சொரபிஞ்சி
நெப்பம்
அறிவுகால்
புகைக்கூண்டு
:)))))
மறந்து போன சொற்களா...அது எக்கச்சக்கமா இருக்கே... ஆனா நாமளும் இல்ல மற்ந்துட்டோம்.. அதுல நான் முதல் ஆச்சே... ட்ரை பண்றேன்..//
மங்கைஜி..இப்படி மறந்துறுவேன் மறந்துறுவேன்னு என்னைய மறந்துடாதீங்க!! ஒகே !!
//நிறைய சொல்லி இருக்கீங்க ...
நெப்பம்.. சொரப்பிஞ்சி எனக்கும் புதிது தான்./
வாங்க முத்து.. ஆமா இரண்டும் எங்க வீட்டு சொத்து !! :))
//அன்ன(ம்)வெட்டி//
hehe... enga voota annakuthi nu solvom.. innikku varai :)
//அன்ன(ம்)கூடை //
Enga vootla annakoodainu basin maadiri irukkara oru paatharatha solvom.. adhu romba perusa irukkumae thanni pudichu veikka.. adhulaya saadham veipaanga ;)
//
காயூ, அன்னக்குத்தி கூட சொல்லுவாங்க த்தான்.. :) அப்புறம் நீங்க சொல்றது சரியே தண்ணிர் பிடுத்து வைக்க உபயோகம் செய்வார்கள், அலுமினியத்தில் இருக்கும் இதை விஷேஷதினங்களில் சாதம் எடுக்க பயன்படுத்துவார்கள். எங்கள் வீட்டில் தினமும் எவர்சில்வரில் சின்னதாக ஒரு அன்னக்கூடை இருக்கும் அதில் தான் சாதம் எடுப்பார்கள். :))
/கூழ் //
Aadi maasam kovil pakkam ellam etti paakaradhae illa pola :) Enga veetla munnadi keda vetti koozh senju saamikku padaippaanga.. ippo recenta andha pazhakkam vittachu but still kezhvaragu koozh appapo seivom.. :)//
காயூ, எட்டிப்பார்க்கறது இல்லை சின்ன வயசுல எங்க ஆயா வில்லி, எதுக்கு எடுத்தாலும் ஒரே பொண்ணு ஒரே பொண்ணுன்னு எனக்கு மட்டும் வேண்டிக்கிட்டு ஆடி மாசம் கூழ் காய்த்து, பெரிய பானையில் (மண்) சிம்மாடு வைத்து வீட்டிலிருந்து ஏரிகரையில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு நடந்தே கூட்டுட்டு போவாங்க.. நடுவுல நம்ம கால்ல எல்லாரும் தண்ணீர் ஊற்றி கழுவி பொட்டு வைத்து..ன்னு என்ன என்னவோ..நடக்கும்..
ஒரு முறை செய்தேன்.. அடுத்தமுறை.. "வில்லி இந்த மாதிரி எனக்கு இனிமே வேண்டிக்காத, உனக்கோ உன் புருஷனுக்கோ வேண்டிக்கோ என்னை ஆளைவிடு" ன்னு எஸ் ஆனது தான் அந்த பக்கமே போறது இல்ல..
வில்லி ஆயாவோடு எல்லாம் முடிந்து விட்டது. வருடம் ஒரு முறை குலதெய்வம் கோயிலுக்கு போயி பொங்கல் வைப்பது என்பது கூட குறைந்து கொண்டு வருகிறது.. விடாமல் செய்ய வேண்டும் என்ற ஆசைதான் நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் நம்மையும் மாற்றி வருகிறது .. :(
'ஜா'வே தமிழ் இல்லையே .. பின் எப்படி 'கூஜா' தமிழ் ஆகும்..!!
சாதம் என்பது -சாதல் அதாவது ஒரு உயிர் இறப்பை குறிக்கும். அதை சோறு அகப்பை என்று குறிப்பிடவேண்டும்
@ Pradeep : Thanks. Soru and Agapai ok.
But in our home we used to say "saadham". I think Saadhal is different from Saadham. Not only our own family almost of community, place, area, city used to practice the same word.
Note: Sorry no tamil font.
நெப்பம் என்பது நுட்பம் என்ற வார்த்தையை வெத்தலையோட மென்று நெப்பம் ஆகிவிட்டது
வேளான்மை வெள்ளாமை ஆனது மாதிறி.( நன்செய்) நஞ்சை ஆச்சு .(புன்செய்) புஞ்சை ஆச்சு.
தருமு
பொதுவான சொல்லாகிப்போன ஆயாவுக்கு...அம்மாவைப் பெற்ற அம்மாவுக்கு அம்மாயி..
அப்பாவைப் பெற்ற அம்மாவுக்கு அப்பத்தா என்று அழைக்கும் வேறுபடுத்துதல் காணாமல்
போய்விட்டது. நெப்பம் என்றால் இலேசான, மிருதுவான என்பது பொருள் ஆகும்.
சரியா கேட்டீங்க
Post a Comment