திருச்சிராப்பள்ளி - பயணக்குறிப்புகள்

சிராப்பள்ளி -என்ற பெயரோடு, திரு சேர்க்கப்பட்டு திருச்சிராப்பள்ளி ஆகியிருக்கிறது.

அம்மா அப்பாவோடு ஒரு வருடம் பொன்மலையில் தங்கியிருந்தோம். 3 ஆம் வகுப்பு படிச்சேன், முதலில் தனியார் பள்ளியிலும், பின்பு ரயில்வே பள்ளியிலும் படித்தோம். அப்போது ஒருமுறை அப்பா, என்னையும் சின்ன அண்ணனையும் கல்லணை & முக்கொம்பு விற்கும அழைத்து சென்றது நினைவில் இருக்கிறது. குறிப்பாக, கல்லணை.

கல்லணை : புளிசாதம் கட்டி எடுத்துக்கொண்டு, பேரூந்தில் கல்லணை சென்று, அப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு, அந்த அணையின் இந்தப்பக்கத்திலிருந்து நடந்து அந்தப்பக்கம் வரை சென்றதும், அப்பா அணையைப்பற்றி சொன்ன சில தகவல்களும் பசுமரத்தாணியாக மனதில் பதிந்தது மட்டுமல்லாது, இத்தனை ஆண்டுகள் கழித்து சென்றும், அணை மற்றும் அதை ஒட்டிய பூங்கா நினைவில் இருந்தது...முக்கொம்பு சுத்தமாக நினைவில்லை. :)

அப்பாவின் காலத்தில் இணையமில்லை,அவரின் கட்டிடம் சார்ந்த தொழில்நுட்ப ஆர்வமும், அதைத்தெரிந்துக்கொள்ள எடுத்த முயற்சியும், சிராப்பள்ளியைச் சுற்றி பிராம்மாண்ட கோயில்கள் பல இருக்க, அவரின் பணிகளுக்கு இடையே எங்களை கல்லணை & முக்கொம்பு விற்கு மட்டும் அழைத்து சென்றது, அவரின் ஆர்வத்தையும், அவர் குழந்தைகளுக்கு எது முக்கியம் என்பதில் அவரின் தேர்வும் தெரியப்படுத்துகிறது.
.
கல்லணையைப்பற்றி ஏராளமான தகவல்கள் இணையம் முழுக்கக்கிடைக்கிறது. அவற்றில் பகிரப்பட்டுள்ள தகவல் எல்லாவற்றிலுமே, அணை இன்றளவும் சிதையாமல் இருக்க, கற்கலுக்கு இடையே வைக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட பசை, ஆனால் அந்த பசை எப்படி எதனால் செய்யப்பட்டதென  கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவும் இதைப்பற்றி சொல்லியிருந்தார், சுண்ணாம்பு கலவையோடு, முட்டை உடைத்து ஊற்றித்தயார் செய்ததாக சொன்னார். இதைத்தவிர அணையைப் பற்றி அவர் சொன்னது எதும் நினைவில்லை..

தாஜ்மகலை விடவும், உலக அதிசயத்தில் ஒன்றான இந்த அணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக சுற்றுலாத்துறை, இந்த இடத்தை சிறந்தமுறையில் பராமரிக்க ஆவன செய்யவேண்டும், உணவகங்கள், கழிவறை, நிழல் குடைகள், குடிநீர் வசதிப்போன்றவை செய்துத்தரவேண்டும். பராமரிப்பின்றி மிகவும் அசுத்தமாகவும் இருக்கிறது.

உச்சிப்பிள்ளையார் கோயில் ; கல்லணையில் மணலை வாரிக்கொண்டு பேய் க்காற்று வீசியது, பிள்ளையார் கோயிலில் மலையின் மேல் நிற்கவே முடியவில்லை, ஆளை கீழேத்தள்ளிவிடுமளவு காற்று. தாயுமானவர் கோயில், உயர்ந்த தூண்கள், சிற்ப வேலைபாடுகள் மிகவும் கவர்ந்தது. தாயுமானவருக்கு வேண்டிக்கொண்டு வாழைத்தார்கள் வைத்து பூசை செய்து, பின்பு அதை பக்தர்களுக்கு விநோயகம் செய்கின்றனர். கடுப்பான ஒரே விசயம், மலையின் ஓரங்களில் நின்று 'செல்ஃபி' எடுத்துக்கொண்டவர்கள்..... 

திருவரங்கம் ;  திருச்சியில் இருந்தபோது, அப்பா அழைத்து செல்லாவிடினும், உறவினர்களின் வருகையின் போது ஶ்ரீரங்கமும், உச்சிப்பிள்ளையார் கோயிலும் சென்றிருக்கிறோம், ஆனால் நினைவில்லை. இப்போது, வரிசையில் காத்திருந்து சென்றும் நொடி'ப்பொழுது ரங்கநாதரை ப்பார்க்க அனுமதிக்கறாங்க. ஆனானப்பட்ட வெங்கடாசலபதியைக்கூட தொலைவிலிருந்தே தரிசனம் செய்துக்கொண்டுப் போகமுடியுது.. ஆனால் இங்க 'ரொம்ப பண்றாங்க..' ஏன் இத்தனை கெடுபிடி, இத்தனை ஜருகண்டீ ' ன்னு பிரியல...

அழகான அம்சமான தெய்வக்கடாச்சம் மிக்க கோமாதா, அதன் பின்னே தேவதையைப்போல வெள்ளை வெளேரென ஒரு குதிரை, அதன் பின்னே ஆடி அசைந்து வரும் யானையின் மேல் குடத்தில் தண்ணீரோடு ஒரு ஐயங்கார்.. னு இவங்க மூவரும் முதலில் சென்று வந்தப்பின்னரே பக்தர்கள் அனுப்பப்பட்டனர். இவங்க மூவரும் என்ன பூசைசெய்ய அழைத்துச்செல்லப்பட்டனர்னு தெரியல...

கோயில் யானை வெளிப்புர சாலையில் என்னை வழிமறித்து நகரவிடாமல் காசுக் கேட்ட (அதை காதோரம் குத்தி குத்தி கேட்கவைத்தான் பாகன்), யானையையும், அந்த பாகனையும் பார்த்தபோது, யானை எங்க கடுப்பாகி, சமயபுரம் யானைமாதிரி தூக்கி அடிச்சிடப்போதுன்னு பயந்து, அது தும்பிக்கையை என்னிடம் தூக்கி காட்டுவதற்குள் அநியாயத்துக்கு குனிந்து காசைக்கொடுக்க, அது என் முதுகைத்தொட்டு ஆசிர்வாதம் செய்தது. லைட்டா பகீர்னு இருந்துச்சி, அது அலேக்கா சுத்தி தூக்கிப்போட வசதியாயில்ல நின்றிருக்கேன்???. தூரக்கிருந்து, இந்தக்காட்சியை பார்த்து வூட்டுக்கார் நமட்டு சிரிப்புடன் பார்த்தார். பொண்டாட்டி பயப்படறதப்பாத்த எந்த வூட்டுக்காருக்குத்தான் சந்தோஷமா இருக்காது சொல்லுங்க.. ??

சமயபுரம் ; ரொம்பவே கூட்டம், கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் அசிங்க அசிங்காம திட்டிக்கொண்டு சண்டை, அதில் பெண்களும் அடக்கம். இவர்களின் பொன் மொழிகளில் முதலில் நனைந்துவிட்டு தான், அம்மனை தரிசனம் செய்ய முடிந்தது.  ஏன் இந்த அம்மனுக்கு இத்தனைக்கூட்டம்னு தெரியல... 250 ரூ டிக்கெட் வாங்கி போயும், கூட்டத்தில் சிக்கி சின்னா பின்னமானோம் என்பதே தகவல்.

திருவானைக்காவல் :  அடேங்கப்பா.. திருவாரூர் கோயிலை விட பிரம்மாண்டமாக இருந்தது.  இத்தலத்தின் வரலாறு, ஹாலிவுட் கதைப்போல இருக்கு, நம்மூரில் இப்படியான பல வரலாற்று/இதிகாசக் கதைகள்  இருந்தாலும், இந்தக்கதையை அடிச்சிக்கவே முடியாது. கோயிலைக்கட்டிய மன்னர் கோச்செங்கட் சோழன். இவரைப்பற்றியக் கதையும் மிக சுவாரசியமானது. மன்னரின் தாயார், பிரசவ நேரத்தில், வலி எடுத்தப்பின்னும், சேவகியிடம் , குழந்தைப்பிறக்காமல் இருக்க, தன்னை தலைகீழாக க்கட்டி தொங்கசெய்து, ஜோதிடர் குறிப்பிட்ட அதே நேரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். பிரசவ வலி எடுத்தும், குழந்தை வெகுநேரம், கருப்பையிலேயே இருந்ததால், குழந்தையின் கண் சிவந்துவிட்டிருக்கிறது. அதனாலேயே குழந்தைக்கு கோச்செங்கட்' என்ற பெயர் வந்ததாம். ம்ஹூம்...

பிரம்மபுரீஷ்வரர் - திருப்பட்டூர் -  வரலாற்றைப் படிச்சிட்டு அப்புறம் இங்க வாங்க. தலையெழுத்தை அப்படியே மாற்றுவாராம் இங்கிருக்கும் பிரம்மர். வருகின்ற அனைவரும் ஜாதகத்தைக்கொடுத்து, சாமியின் பாதங்களில் வைத்து வாங்குகிறார்கள். ஐயர்கள் இதில் அதிகமாக வருமானம் பார்க்கிறார்கள். நாங்க அந்த வேலைப்பாக்கல. கவனிச்சோம் அவ்வளவே !!

வயலூர் ;   ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால், ஓடோடிவந்தோம், 12.53 க்கு கோயிலை எட்டியபோது, வெளிவாசல் சாத்தப்பட்டு விட்டது, இருப்பினும், இன்னொரு வாசல் வழியாக உள்ளே ஓடினோம், 5 நிமிடமே இருந்ததால், சன்னதியின் முன் கதவும் சாத்தப்பட்டிருந்தது. ஓடிவந்தும் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்த நேரத்தில், திடீரென இடதுப்பக்கமாக வந்த ஒருவர், இந்தப்பக்கம் ஒரு வழியிருக்கு, வந்துப்பாருங்க்கன்னு அழைத்தார். ஓட்டமாய் ஓடினோம். முருகர் காத்திருந்தார், நல்ல தரிசனம் கிடைத்தது. திருவரங்கத்தில் காத்திருந்தும் சரியாகப்பார்க்க முடியாமல் வந்தோம், இங்கு ஓட்டமாய் ஓடி, கடைசி சில நிமிடங்களில் முருகனை வள்ளி தெய்வானையோடு தரிசனம் செய்தோம்.

முக்கொம்பு ; நடை சாத்திடுவாங்கன்னு, வேக வேகமாக ஓடியதில் , முக்கொம்பு வரும் போது, அதீத சோர்வுடன் இருந்தோம். காரிலேயே அணையை ஒரு சுற்று , சுற்றிவிட்டு ஊர் வந்து சேர்ந்தோம்
கர்நாடக எல்லையில் ஆடு தாண்டும் காவிரி, தமிழ்நாட்டில் குறிப்பாக கரூர் & திருச்சி மாவட்டங்களில் அகண்ட காவிரியாக மாறி ஓடுவதும், கோயில் அமைப்புகளும், எனக்கு சில தெளிவுகளை ஏற்படுத்தியது.

சிராப்பள்ளியைச் சுற்றி அகண்ட காவிரி ஆர்ப்பரித்து அடங்காமல் ஓடியது. அடை மழைக்காலங்களில், ஆற்றின் குறுக்கே அணைகள் இல்லை, கட்டுப்படுத்தமுடியாத வெள்ளம் புரண்டு, ஊரினையும் மக்களையும் அடித்துச்செல்ல, ஆட்சியில் இருந்த சோழ மன்னர்கள், தன் நாட்டு மக்களையும், நாட்டையும் காக்க இக்கோயில்களைக் கட்டி அதில், மக்களை பாதுக்காத்தும், அணைகளைக்கட்டி நீர்ப்போக்கை கட்டுப்படுத்தியும்/ திசைத்திருப்பியும் காப்பாற்றியுள்ளனர்.

திருவரங்கம், திருவானைக்காவல் இரண்டும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே தீவாக உள்ளது. ஒரே காலக்கட்டத்தில் ஒரே மாதிரியான கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது, 5 பிராகரங்கள், அவற்றில் வெளிப்பக்க பிரகாரங்களில், வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாகனங்களும் சென்று வரமுடியும். அகலம் குறைந்த மிக உயரமான வாசல்கள், அவசரமாக சட்டென மூடிவிடக்கூடிய அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது, தவிர மிக உயரமான மதில்கள்.
 
இந்தக்கோயில்களின் அமைப்பே, அகண்ட காவிரியின் நீர்வரத்தைக் நம் கண் முன் கொண்டுவருகிறது. குறிப்பாக கல்லணையில் பிரியும் ஆறுகள், டெல்டா பகுதிகளுக்கு திருப்பி விடவும், அடித்துவரப்படும் வண்டல் மண்ணின் தாக்கத்தால் அணை சேதமடையாமல் இருக்கும்படியாகவும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நம் கோயில் வரலாறுகளும், அதன் பிரமாண்டங்களும், பயன்களும் வியந்து மாளாது.....

அடுத்து.... வர இருப்பது.. திருவாரூர் தேர்... :)


உனக்கு 20 எனக்கு 18


கவி  :  நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா?

நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ ? வாங்கி த்தர முடியாது !

கவி :  ஆங்ங்ங்ங்.......

************
கவி : (இரவு லைட் எல்லாம் நிறுத்திட்டு படுத்தப்பிறகு, ஒரு 10 நிமிஷம் கழித்து)  மொட்டு, இந்த ஜன்னல் பக்கமும்தான்  பின்னாடி வீடு கட்டியிருக்காங்க, இந்த ரூம் நல்லா வெளிச்சமாதான் இருக்கு, கிச்சன் பக்கம் கட்டற பில்டிங் ல அவங்க இதே மாதிரி லைட் கலர் பெயிண்ட் அடிச்சிட்டா கிச்சனும் வெளிச்சமா இருக்கும். வாட் யூ சே..?!! அம்மா சரியா யோசிக்கிறேனா?

நவீன் : தூங்கும் போது..... மூளையயும் தூங்கவச்சிட்டு தூங்கு...... அது தனியா வேல செய்துப்பாரு....

கவி : ஸ்ஸ்ஸ்.... 

***********
கவி :: அப்பா வரார்டா... அவர் சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டியா?

நவீன் : எப்ப வரார்..?

கவி : வெள்ளிக்கிழமை ராத்திரி இங்க இருப்பாரு...

நவீன் : அவர் வரத்துக்குள்ள முடிச்சிடுவேன்.

கவி : அடேய்..2 மாசமா இப்படியே சொல்ற..ஆனா வேல நடக்கல.. அவர் வந்து கேட்டா என்னடா செய்வேன்..?

நவீன் : ஹா ஹா ஹா...எப்படியும் என்னைக்கேக்க மாட்டார், உன்னைக்கேட்டு, உன்னதான் திட்டப்போறாரு...  நான் ஏன் கவலப்படனும்...

கவி :.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

************

கவி : (இரவு 9 மணி இருக்கும் ) இந்த நேரத்தில் எங்க கிளம்பர.. இப்ப அவரு ஏன்னு கேப்பாரு, தினம் இப்படிதான் போறானான்னு கேப்பாரு...

நவீன் :உன்னை பாத்துக்க, இன்னைக்கு 'கட்டப்பா இருக்கையில், இந்த பாகுபலி எதற்கு...?! '

கவி: ஸ்ப்பஆ..... ........... ! அவர் ரூமைவிட்டு வரத்துக்குள்ள கெளம்பித்தொல...

நவீன் : அந்த பயம் இருக்கட்டும் !! :)))))))

கவி; ..........
********

கவி; கேமரா சரியில்ல.. கொஞ்சம் சரி செய்து தாயேன்..

நவீன் ; எத்தன மாஸ்டர் வாங்கியிருக்க..

கவி; அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல 

நவீன் ; கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...எத்தன மாஸ்டர்..
 

கவி :   .................

நவீன்;  MFT, MBA.....ஹ்ம்ம் ............இன்னொன்னு என்ன..

கவி;  Masters in Sociology

நவீன் ; ஆஹான்.. ஆனா நான் ஒரே ஒரு மாஸ்டர் தான்.. உன்னைவிட கம்மியாத்தான் படிச்சியிருக்கேன்..உன்னைவிட அறிவும் கம்மி.... நீயே சரிப்பண்ணிக்கோ...

கவி; போடாங்க...

**********
நவீன் ; குண்டாகிட்டே போறியே உனக்கு வெக்கமா இல்ல

கவி;  ம்ம் இருக்கு... ஆனா ஏதோ பிரச்சனை.. ஆப்ரேஷனுக்கு அப்புறம், உடம்பு நான் செய்யற எதுக்கும் ரெஸ்பான்ட் செய்ய மாட்டேங்குது... 

நவீன் ; இப்படி சொல்லிக்கிட்டே நல்லா குண்டாகிட்டேப்போ ..ஒரு நாள் வீல் சேர் தான்...

கவி ; ஞே !!! 

*******

நவீன் ; அம்மா.. கேமரா வ சரிப்பண்ணிட்டியா...

கவி ; ப்ப்ச்.. இல்ல..அதான் எப்படின்னு படிச்சிக்கிட்டு இருக்கேன்..

நவீன் ; ஹா ஹா ஹா ஹா...படிப்படி... நல்லாப் படி..

கவி;    7.5 ........ கிளம்புடா...

நவீன் : ஹா ஹா ஹா.. டென்ஷன் ஆவறப்போல..

கவி; ஸ்ஸ்ஸ்ஸ்.......

*********** 

கவி ; மதர்ஸ் டெ' க்கு அம்மாவ எங்க கூட்டிட்டு போகப்போற.......

நவீன் ;  திருவாரூர் ;)))))))))))

கவி ; அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..............  ;)))))))))) 

***************
பீட்டர் தாத்ஸ் ; The eternal love between man and woman really exists! It`s the love between mother and her son.

வட / தென்னிந்திய நதிகள் .....

பயணங்கள் ..குறுகியவையோ, நெடுந்தூரமோ அத்தனையும் அனுபவமே. செல்லும் இடம், உணவு, சுற்றியிருக்கும் மக்கள், மொழி, தோற்றம், பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு, உடைகள்,வாழ்க்கை முறை ...என அத்தனையும் தெரிந்துக்கொள்ள வேண்டியவையே..........

சென்ற வாரத்தில் திருச்சி நோக்கிய பயணத்தின் போது, தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகத்தில், புவியியல் பிரிவில் தலைமை பேராசிரியராக பணிபுரியும்,  டாக்டர்.சுலோசனா' வும் உடன் வந்திருந்தார். அன்று பல்கலைக்கழகத்தில் நடந்த 'திருவாரூர்' குறித்த ஒரு வினாவிடை நிகழ்ச்சியில் பங்குக்கொண்டதையும், அதில் கேட்கப்பட்ட சுவாரசியமான கேள்விகள் (விரைவில் இணைக்கிறேன்)பற்றியும் பகிர்ந்தவாரே வந்தார்.

கேள்விகள், திருவாரூர் தியாகராஜர் கோயில் சார்ந்தவைகளாகவே இருந்தன. அநேகமான கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.  எனக்கு பொது அறிவு இல்லையென்றே சொல்லலாம். ;) தெரியாத பல விசயங்களை தெரிந்துக்கொண்டேன்.

அவர் புவியியல் பேராசிரியர் என்பதால், கங்கை நதியைப் பற்றி கேட்டேன். மேற்கு வங்கம் முழுக்க, கங்கையின் கிளை நதியான ஹூங்லி நதி பாய்கிறது, இந்த நதியைப்பற்றி, பொறாமையில் பொங்கி பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். என் கண்ணுக்குள் நின்றுவிட்ட இந்நதியை ப்பற்றி பேச ஒருவர் கிடைத்தால் விடுவேனா?

முதலில் கேட்டது, 365 நாளும் வற்றாமல் ஓடி, கடலில் கலந்து, நீரெல்லாம் வீணாகிறதே, அதை அப்படியே வளைத்து தென்னிந்தியாவிற்கு கொண்டு வர எத்தனை ஆண்டுகள் ஆகும்.? 
...  அதற்கு அவர் சொன்ன பதிலை என்னால் நம்பவே முடியவில்லை. 'நமக்கிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4-5 ஆண்டுகளுக்குள் நதிகளை இணைக்கமுடியும்' என்றார். 'அட... 4-5 ஆண்டுகள் தானா?'

'ஆமாம் அவ்ளோ  தான் ஆகும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்தைக்கடக்கும் போதும் அவர்களின் அனுமதித்தவிர்த்து, அந்த மாநிலத்தின் சட்டத்திட்டங்கள் முதற்கொண்டு,நில ஆக்ரமிப்பு, அது சார்ந்த பிரச்சனைகள் என பல நிலைகளை த்தாண்ட வேண்டியுள்ளது. அதனால் காலதாமதம் ஆகத்தான் செய்யும். இதன் நடுவில் மத்திய மாநில அரசுகளின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முதலிருந்து காய் நகர்ந்தும்படியாக ஆகிவிடும். அங்கங்கே கோப்புகளும், வேலையும் தேங்கிவிடும்,நின்று விடும் வாய்ப்புகளும் அதிகம்'', என தேவையான தொழில்நுட்ப வசதி இருந்தாலும், இந்தமாதிரியான  திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாமல் போவதற்கான பல்வேறு காரணங்களை பேசிக்கொண்டு வந்தோம்.

இந்தியாவை ப்பொறுத்த வரையில், அரசியலும், ஊழலும் ஒன்றோடு ஒன்று கைக்கோர்த்து ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இன்றைய நிலையைப்பற்றி சொல்லவே வேண்டியதேயில்லை, இதில் நதிநீர் இணைப்பெல்லாம் நமக்கு நிரந்தரக்கனவே.. !

அடுத்து, கங்கை ஆற்றின் நீர் வரத்துப்பற்றியும், மண்ணின் தன்மைப்பற்றியும் சொன்ன போது, அது சார்ந்த தகவல்களை தந்தார்.

இமயமலையிலிருந்து தொடர்ந்து உருகும் பனியால், கங்கை ஆண்டு முழுதும் வற்றாமல் ஓடுகிறது, அதே சமயம்,நீரின் வேகம் என்பது சமவெளியை அடைந்தவுடன் மிதமாகவே இருக்கிறது. சமவெளியில், நீரின் வேகம் குறைவாக இருப்பதால், நதிநீர் இணைப்பு செய்யும் போது, தென்னிந்தியா வரை நதியைக்கொண்டு வர அதற்குத்தகுந்தார் போல ஆழமான/சரிவான பாதையை ஏற்படுத்த வேண்டியிருக்கும், மேற்கு வங்கத்தில், ஆற்றின் வேகத்தைப்பார்த்து, திருப்பி விட்டால்........ ஆவேசமாக அடித்துக்கொண்டு  வந்துவிடும்  என்று நான் நினைத்தது தவறு எனப் புரிந்தது

மண்ணின் தன்மைப்பற்றியும் அது சார்ந்த தொழில்கள் பற்றி பேசும் போது,  இமயத்திலிருந்து தொடங்கும் போது மலையிலிருந்து கற்கலாக உருண்டு வர தொடங்கி, தூரம் செல்ல செல்ல கற்கல் உடைந்து சின்ன சின்ன கூழாங்கற்கலாக மாறுவதோடு, சமவெளியில் வரும் போது மெல்லிய மணலாக மாறி, கங்கை பாயும் நிலவெளிகளிலும் நிலத்தடி மண்ணின் தன்மையும் அதற்கு தகுந்தார் போல மாறிவிட்டது. அதே சமயம் , நம்மூர் ஆறுகள் மழையை சார்ந்து இருப்பதால்,  ஆற்று மணலின் தன்மை வேறுவிதமாக உள்ளதென  வட/ தென்னிந்திய ஆற்று மணல்களின் வித்தியாசங்களை விளக்கி சொன்னார்.

ஆண்டு முழுதும் நீர்வரத்து இருக்க வாய்ப்பில்லாமலும் , தொடர் காடுகளின் அழிப்பின் காரணமாக, மழை வரத்து இல்லாமல், நம் ஆறுகள் வரண்டு, முல் செடிகள் மண்டி வளரும் அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றன.

இமயம் கண்டிப்பாக இந்தியாவின் பொக்கிஷமே... காவேரி'க்காக நாம் போராடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில்,  வடக்கிழக்கு மாநிலங்களில் வற்றாமல் ஓடி, தண்ணீருக்காக கத்தி கெஞ்சி கூச்சலிட்டு போராட்டம் செய்யும் மோசமான நிலையில் மக்களை வைக்காமல், கண்ணுக்கு எட்டியதூரம் பரந்து விரிந்து சோர்வில்லாமல் பாயும் கங்கை நதியை நினைத்துப்பார்த்து வணங்காமல் __/\__ இருக்க முடியவில்லை.....

அணில் குட்டி அனிதா ; ஒரு இடத்துக்குப் போனமா வந்தமான்னு இல்லாம... தொறந்த வாய மூடாம, அடுத்தவங்க காதுல இரத்தம் வரளவுக்கு பேசி..... வீட்டுக்கு வந்து வூட்டுக்கார்.. அந்த மூடாத வாயப்பத்தி கேட்டு கழுவி கழுவி ஊத்தினத தொடச்சிவிட்டுட்டு....  பதிவு எழுதியிருக்காங்களே..... கிர்ர்ர்ர்...இவங்கள...

பீட்டர் தாத்ஸ் ;

மழையும் நானும்..

மழையை எதிர்நோக்கா தினம்
உடல் தகிக்கும் வெம்மை
வியர்வையில் உடை ஒட்டிக்கொண்ட எரிச்சல்

எங்கிருந்தோ அடர்ந்த ஒரிருள்
அன்னாந்துப்பார்த்தன கண்கள்
மெது மெதுவாய் நெருங்கியது
ஜோடி கண்கள் பல கடந்து
என் கண்களையும் சந்திக்கையில்
கொட்ட ஆரம்பித்தது.;

அது அசாதாரணம் ;ஆவேசம்
சன்னல் வழியே வேகச்சாரல் ;வீட்டினுள் ஓடை
காது கிழியும் இடியோசை
ஆவேசத்தை எதிர்க்கொள்ள ஏனோ ஆசை
இடிப்பாயுமென மெல்லிய நடுக்கம்
பாயுட்டுமே அதுவே முடிவென்றால்..

அண்ணாந்து வானம் பார்த்தேன்.
கண்களில் நேரே விழுந்து வழிந்தது
ஒரு கண் விரித்து ஒரு கண் சிமிட்டி
கண்ணடித்து ரசித்து புன்னகித்தேன்
உணர்ச்சிவசப்பட்ட மழையோ
உதடுகள் நனைத்து அணைத்தது
நாவால் சுழட்டி ருசிப்பார்த்தேன்
பின்னல் அவிழ்த்து தலை உதரினேன்
வேகத்தில் துளிகள் கோடாகி தொடர்ந்ததில் 
விரைந்து நனைந்தேன்
இடியின் ஓசையில் பூமி நடங்கியது
சிந்தையில் பழமும் மொட்டும் வந்து மறைந்தினர்
சுவரோரம் சாய்ந்து மொத்தமாய் விழுந்த
தண்ணீரில் முகம் தூக்கி சிலிர்த்தேன்
மணித்துளிகள் கரைந்தன

அங்கே
மழையும் நானும் மட்டும்.. !! Related post  : http://kavithavinpaarvaiyil.blogspot.in/2010/07/blog-post_19.html


Photo Courtesy : Thx Google 

என்னாலேயே முடியல..

என் கணவர், என்னுடைய கனவுகளை எழுதிவைக்க சொன்னக்காரணமே, என் கனவுகள் கதைகளாக இருப்பது மட்டுமல்ல, அதை அவரிடம் சொல்லும் விதமே!.

ஒரு தயாரிப்பாளரிடம், அறிமுக இயக்குனர் கதை சொல்வதைப்போல இருக்குமென நினைக்கிறேன். அவர் எதிரில், அந்தக்கனவு நிஜத்தில் நடந்தால் எப்படியிருக்குமோ அப்படி சொல்லுவேன். பின்னணி இசை மட்டுமே இருக்காது.

ஓவராக கற்பனை செய்துக்கொள்வதில் என்னை வெல்ல என்னாலேயே முடியாதுதான். இருந்தாலும், நேற்று வந்த கனவை நினைத்து சிரிப்பதா அழுவதா.. இல்லை ஏன் இப்படியெல்லாம் எனக்கு கனவு வந்து தொலைக்குதுன்னு நினைச்சி ஆச்சரியப்படுவதான்னு தெரியல...

தினப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடக்குது..

ஓவியா சென்றதிலிருந்து பிக்பாஸ் பாதிப்பு இல்லை.... 

அதிமுக வால் பிரேக்கிங் நியூஸ் அடிக்கடி வந்து அந்த சத்தமும் பழகிப்போச்சி

ரஜினி அரசியல் - பெருசா யோசிக்கல..

கமல் டிவிட்டர் - யோசிச்சாலும் ஒன்னும் புரியப்போறதில்ல..

என் சொந்தப்பிரச்சனைகள்.. அது ஏகத்துக்கும் இருக்கு...

என் கணவரின் அலுவலகப்பிரச்சனை, அதை அவர் எப்படிக்கடக்கப்போகிறார் என்ற கவலை...

வெளி மாநிலத்தில் இருப்பதால், இங்கு சந்திக்கும் மனிதர்கள்..னு

என்னென்னமோ தினப்படி நடக்குது.. இதுல..நேற்று எனக்கு வந்த கனவு இருக்கே.... படிங்க..நீங்களும் கடுப்பாக சான்ஸ் இருக்கு...

காலையில் எழுந்துவரும் போது கனவு நினைவில் இல்லைதான். ஆனால் பல் விளக்கும் போது நினைவுக்கு வர, மறந்துவிடுவேனோன்னு , பிரஷ்ஷை வாயிலிருந்து எடுத்துவிட்டு அவரை அழைத்து கனவை சொன்னேன்.

"இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்ட்ரேன்ஜ்ஜா ஒரு கனவு வந்துச்சிப்பா..."

புதுசா என்ன..ங்கற மாதிரி லுக்கு விட்டுட்டு என் முகத்தையே கவனிச்சார்..

"காடை இருக்கில்ல..."

"ஆங்...??????"

"காடை ப்பா காடை... பறவை..கோழிமாதிரி..நாமக்கூட மூனார்ல காடை முட்டை ஆம்லெட் சாப்பிட்டோமே..?! அந்த காடை..."

"ம்ம்ம்..சொல்லு.. " னு சொன்னக்குரல் கடுப்பாக இருந்தது.


"அந்த காடையை பிடிச்சி, பால் கறந்து.. அதை ஒரு ஃபில்டரில் வடிகட்டி உங்களுக்கு தரேன்" ப்பா..

ஞே.... அவர்ட்ட ரியேக்ஷனே இல்ல..என்ன சொல்றதுன்னு தெரியாம.. என்னையே ப்பாக்கறாரு..  [கனவை சொல்ல முன்னமே கடுப்பா?  யார்கிட்ட??? ]

ரியாக்ஷன் செய்யமுடியாம திகைச்சிப்போய் நிக்கறவரை பாத்து சிரிப்பு வந்தாலும், வெளியேக்காட்டிக்காம... 

"எப்படிப்பா காடை க்கிட்ட பால் கறக்க முடியும்? எனக்கு ஏம்ப்பா இப்படியெல்லாம் கனவு வருது..?"

"உனக்கு இப்படியெல்லாம் கனவு வராட்டிதான் பிரச்சனை..காடை என்ன காடை.. எரும்பை ப்பிடிச்சிக்கூட நீ பால் கறப்ப.. போடி போ.. போய் பல்ல வெளக்கு...."

"ஆவ்வ்வ்.... அப்ப நெக்ஸ்ட் பால் எரும்புக்கிட்டவா..? " ன்னு நினைச்சிக்கிட்டு அவர் மேற்கொண்டு திட்டும்முன்ன எஸ் ஆகிட்டேன். :

கனவை சொல்லியாச்சி...இதோ எழுதியும் வச்சாச்சி. ஆனா என்னாலேயே இந்த கனவை இப்பவரை ஜீரணிக்க முடியல.. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் கனவு வருதுன்னு தெரியமாட்டேங்குது..

நேத்திக்கோ..அதுக்கு முன்னமோ... காடையோ..கோழியோ மற்ற பறவைகளைப்பற்றியோ பேசல.. பார்க்கல.. காடை ஆம்லெட் சாப்பிட்டுக்கூட ஒரு 4-5 வருசமிருக்கும்..

என்னமோ போங்க.. என்னாலேயே முடியல..

அணில் குட்டி : பாருங்க..கொஞ்ச கொஞ்சமா சந்தரமுகியா மாறிக்கிட்டு இருக்க கவிதா வை பாருங்க.!!!.

பீட்டர் தாத்ஸ் : I'm interested in the dream and subconscious mind, the peculiar dream-like quality of our lives, sometime nightmare quality of our lives. - Anthony Hopkins

வெங்காயம் நறுக்கிய "கத்தி"

எலிப்டிக்கலை ((elliptical) மிதித்தபடி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்  ..."என்னாச்சு....?"

சலிப்பும் எரிச்சலுமாய்.. "கோச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா..."
"...................................." 

எப்படி ரியாக்ட் செய்யறதுன்னு தெரியல....  சின்ன சின்ன விசயத்தை பெருசாக்கி.. ...... ச்சே...!! உப்பு பொறாத விசயமெல்லாம் மனுசனுக்கு எவ்வளவு மன உளைச்சலை தருது???.... அதும் பெண்ணுக்குள் தான் எத்தனை "multiple personality?". அம்மா' வாக அதீத அன்பை பொழியும் அவளே,  மருமகளாக/மாமியாராக/நாத்தனாராக .."வில்லி" என பெயரெடுப்பதும்..? அவளைப்படைத்த ஆண்டவனுக்கே அவளை புரிந்துக்கொள்ள முடியுமான்னு தெரியல.

எலிப்ட்டிகல்ஸ் ஐ விட்டு இறங்கி தரையில் செய்ய வேண்டிய
உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். அவளும் நேரம் முடிந்து பக்கத்தில் வந்து நின்றாள்.

"எத்தனை நாள் தான் போட்டும் போட்டும்னு சும்மா இருக்கறது? நானும் பலமுறை இப்படி செய்யாதீங்கன்னு அமைதியா பொறுமையா சொல்லிப்பாத்துட்டேன்... திரும்ப திரும்ப அதையே செய்யறா....சுத்தமா ப்பிடிக்கல எனக்கு...."

"நீ அம்மாவை விட்டு சொல்ல சொல்லியிருக்கலாம்...."

"ம்க்கும்.....அடிக்கடி சொல்ற என்னையே மதிக்கல... இதுல அம்மாவையா மதிப்பா அவ? திமிர் பிடிச்சவ.... இவள எல்லாம் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கனும்.. இல்லைனா... தலமேல ஏறி உக்காந்து மொளகா அரைச்சிடுவா.."

கல்யாணம் முடிஞ்சி 4 மாசம் கூட ஆகல. வீட்டுக்கு வந்த அண்ணி'யை இவளால சகிச்சிக்க முடியல... இவ கல்யாணம் செய்துக்கிட்டு போய் எப்படி இருக்கப்போறாளோ? ..............இதெல்லாம் மைன்ட் வாய்ஸ் தான்.. அவளிடம்..

"உனக்கு டாலரன்ஸ் ரொம்ப கம்மி அலர்."

"எத்தனை தரம் சொல்லிக்கொடுத்தாலும், தினம் செய்யற தப்பையே திரும்ப திரும்ப செய்தால் உனக்கும் டாலரன்ஸ் இருக்காது.."

"என்னோடா அம்மா, நான் ஆபிஸ் விட்டு வரத்துக்கு முன்ன எனக்கு ஈசியா இருக்கும்னு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சி வைப்பாங்க. தினம் மாவு கீழக்கொட்டி இருக்கும், ஆபிஸ் விட்டு வர டென்ஷன்ல
அதப்பாத்தா..கத்துவேன்.... ஆனா அவங்களால முடிஞ்சது அவ்ளோதான்..  'போடி உனக்கு மாவு பெசஞ்சி தரதே பெரிய விசயம்னு" சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.. நான் கத்தறத காதுலக்கூட வாங்க மாட்டாங்க.."

..எனக்கு அம்மா.. அதனால இதைப்பெரிய விசயமா பேசறதில்ல... அதுவே மாமியாரா இருந்தா யோசிச்சிப்பாரு... என்னால கத்தவும் முடியாது.. கத்தினா..அவங்களும் தொடச்சிவிட்டுட்டு போகமாட்டாங்க.....அதான் வித்தியாசம்.. நாம தான் இடத்துக்கு ஆளுக்கு தகுந்தாப்ல போயிட்டே இருக்கனும்... சின்ன சின்ன விசயத்தை பெருசு படுத்தாம விட்டுட்டாவே..பாதி பிரச்சனையை வராது..

"வாஸ்தவம் தான்.. ஆனா சின்னதா இருந்தாலும் ஒவ்வொரு விசயமும் ஒவ்வொரு ரிசல்ட் தரும். ஒரு நாளைப்போல வெங்காயத்தை நறுக்கிட்டு கத்தியை கழுவாம வச்சிப்பாரு, எவ்ளோ நாத்தம் அடிக்கும் தெரியுமா? சமையல் ரூமே நாத்தம் அடிக்கும். கத்தியில் ஒருமாதிரி அழுக்குப்படிய
ஆரம்பிச்சுடும். அந்த கத்தியை வச்சி வேற என்ன நறுக்கினாலும் இந்த வெங்காய நாத்தம் அதிலேயும் வந்துடும்.  இதை அவக்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். ஆனா அவ எங்க கேட்டா.. ? அதான் நேத்து புடுச்சி வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்.. ! "

".... போக போக சரியாகிடும்ப்பா.. அவங்களுக்கு நீங்க செய்யறாப்ல செய்து பழக்கமிருக்காது. ..கொஞ்சம் டைம் குடு.."

"ம்க்கும் கொடுத்துட்டாலும்,...!!!. என் அண்ணனுக்கு தூபம் போட்டு , அம்மாவையும் என்னையும் தினம் எதாது காரணம் சொல்லி நோண்ட மட்டும் நல்லா தெரியுது.. இது தெரியலையா??..."

"...விடு.. திரும்ப வந்தா எப்படியோ இருக்கட்டும்னு இருக்க பாரு...சண்டை ப்போடாத.. உன்னைத்தான் குத்தம் சொல்லுவாங்க.."

"வந்தாப்பாக்கலாம்.. நீ வேணாப்பாரு, தனிக்குடித்தனம் அடிப்போட்டுட்டு அவங்க அம்மா அப்பா தான் வருவாங்க.. அவ எங்க வரப்போறா?

"..........................."

செய்திருக்குமா விஜய் டீவி? # Bigg Boss Tamil

ஓவியாவிடம் ஆரவ் பழகியவிதம் தவறே. வேணாம்னு நினைக்கறவன் தள்ளியிருக்கனும். இங்க இருக்கவரை டைம் பாஸ் னு தொட்டு பேசறதும், கேமரா இருக்கு தள்ளியிருன்னு ரகசியமாக அடிக்கடி சொல்வதும், ஸ்மோக் ரூம்மில் வேற மாதிரி பேசறதும் னு அவன் செய்தது எல்லாமே பொறுக்கித்தனம். ஏன்னா காயத்திரியிடம் முதல் முதலில் சொல்லும் போதே ஓவியா அவனை நிஜம்மாவே காதலிக்கறான்னு தெரிஞ்சி தான் சொன்னான்..

நாமிநேஷன் ஆகாம இருக்கனும்னா காயத்திரி & கோ விற்கு சொம்பு தூக்கனும் அதே சமயம் ஓவியாவிடம் நெருக்கமா இருக்கறது அவங்களுக்கு த்தெரியவும் கூடாதுன்னு திட்டமிட்டு அதை செயல்படுத்த ஓவியாவை மனதளவில் தயார்ப்படுத்த நினைத்தான். ஆனால் நம்ம ஓவியா தான் உண்மையாச்சே எப்படி சரின்னு சொல்லுவாங்க. சொன்னாலும்.. ஏன் அப்படி நடிக்கனும்னு அடுத்த நொடியே மாறிடுவாங்க.

இங்க தான் ஆரவ்'க்கு பிரச்சனை ஆரம்பிச்சுது. தள்ளிவிடறது, பேசாமல் போறது, அடுத்தவங்கக்கிட்ட "ஓவியா என் மேல வந்து விழறா"ன்னு சொல்லி, தனக்கு ஓவியாவை பிடிக்காதுன்னு வெளியில் இருக்க அவன் காதலிக்கும், உள்ள இருக்க மத்தவங்களுக்கும் "தான் நல்லவன்" னு புரிய வைப்பதில் ஆரம்பிச்சி டென்ஷனாவே இருந்தான்.

ஓவியா  "காதல் இல்லை" ன்னு ஆரவ் சொன்னதால், அந்தக் கோவத்தை  மற்றவர்களிடத்தில் காட்டினாங்க. அதற்குப்பிறகும் ஓவியா குழப்பமடையக்காரணம், ஆரவ் திரும்ப வந்து பேசறது தான். தவிர, இரவே, "நாளை நான் இருக்கமாட்டேன்னு " னு சொல்லி ஓவியாவை அதிகளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் அவனே. அதை நினைத்தே இரவு தூங்காமல் "மிஸ் பன்றேன்" னு சொல்லிட்டே இருந்தாங்க.

காலையில் காயத்திரி "ஆரவ் இருக்கான்"னு சொன்னதும், ஓவியா ஓரளவு நார்மல் ஆனாங்க. ஆனால், ஆரவ் திரும்பவும் மற்றவர்களால் நாமிநேட் செய்யப்பட்டதும், எப்பவும் போல இவ்ளோ நாடகம், திட்டம் போட்டும் நம்மை நாமிநேட் செய்துட்டாங்களேன்னு, ஓவியா இன்னமும் மன உளைச்சலில் இருக்காங்கன்னு புரியாமல், சுயநலமாக "இப்ப சந்தோஷமா"" ன்னு கேட்டு , ஓவியாவை இன்னமும் மன அழத்தத்திற்கு ஆளாக்கிவிட்டான். அவனிடம் பேச, ஓவியா படுக்கை அறைக்கு சென்ற போதும், "யாரோ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க" ன்னு திரும்பவும் அப்படியே பேசி ஒவியாவை காயப்படுத்தவும் செய்தான்.

ஓவியா , உண்மையாக நேசிப்பதால், நம்மால் தான் இப்படியெல்லாம் ஆச்சோ? ...ஏன் திரும்பவும் நம்மக்கிட்ட சாதாரணமா பேசறான்..?  அவனுக்கு காதல் இருக்குமோங்கற சந்தேகம் அதிகமாகி அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மட்டுமே நீச்சல் குளத்தில் இறங்கி என்னவோ முயற்சி செய்தாங்க. அந்த ஆழத்தில் நீச்சல் தெரியாவிட்டாலும் சாகமுடியாது என்பதும் உள்ளே ப்போன கொஞ்ச நேரத்தில் ஒவியாவிற்கு தெரிந்திருக்கும்.

ஓவியா இப்படியிருக்க 90% ஆரவ் வும், 10% மட்டுமே மற்றவர்களும் காரணம்.ஓவியாவிற்கு, ஆரவ் ஓவியாவைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசிய குறும்படத்தைக்காட்டியும்,வெளியில் மக்களின் ஆமோக ஆதரவையும், அன்பையும் காட்டியும் மனக்குழப்பத்தை எளிதாக ப்போக்கிட முடியும்.

செய்திருக்குமா விஜய் டீவி?

நிகழ்ச்சிக்காக அந்த பெண்ணின் மனதோடு விளையாடி, பைத்தியக்காரி பட்டத்தை விஜய் டீவி கொடுக்காது என்று நம்பலாமா? பரணியை அப்படி சொல்லிதான் அங்க இருக்கவங்க அனுப்பினாங்க.


பின்குறிப்பு : ஓவியா போயிடுவாங்கன்னு தெரிஞ்சவுடனே, ஆரவ் க்கு ஒரு நிம்மதியும், தான் அங்கு தொடர்ந்து இருக்கமுடியும் என்ற நம்பிக்கையும் வந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இவன் அக்கறையோடு இல்ல சும்மாக்கூட பேசாமல் இருப்பது ஓவியாவிற்கு நல்லது. எப்படி பொய்க்காரி சூலி இப்ப அமைதியா தள்ளி இருக்காளோ அப்படி..