தேவையானவை :

மக்ரோனி - ஒரு பாக்கெட் (200 (அ) 250 கிராம்)
பச்சை பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - பெரியது ஒன்று
தக்காளி - பெரியது ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 1.5 டீஸ்பூன் (இத்துடன், சோம்பு 1/4 ஸ்பூன், லவங்கம் 2 சேர்த்துக்கொண்டேன்)
தாளிக்க : சோம்பு, லவங்கம், பட்டை, பட்டைஇலை
மிளகாய் தூள் : 3/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் : ஒன்று (நீட்டில் வெட்டவும்)
முட்டை - இரண்டு
கொத்தமல்லி : சிறிது
எண்ணெய் , உப்பு : தேவையான அளவு

செய்முறை : மக்ரோனியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு வேகவைத்து , வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.  ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் வேகவைக்கனும். அவனில் 9 நிமிடங்கள் வைத்து எடுத்தேன்.

வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி, லவங்கம், சோம்பு, பட்டை, பட்டைஇலை போட்டு தாளிக்கவும், பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி சிவந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கி, கடைசியாக பட்டாணி , தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் முட்டை உடைத்து ஊற்றி கிளரி, கடைசியாக வேகவைத்துள்ள மக்ரோனி சேர்த்து உப்பு த்தேவைப்பட்டால் சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

மக்ரோனி எப்படி செய்தாலும் சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். 

நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகள் எதுவுமே எங்க வீட்டு சமையல் இல்லைதான். ஒரே ஒரு முறை கூட எங்க வீட்டில் இவையெல்லாம் செய்ததில்லை. காலத்திற்கு தகுந்தார் போன்றும், குழந்தைக்காகவும் சமைக்க கற்றுக்கொண்டவை. நிச்சயமாக எங்க வீட்டு பாரம்பரிய சமையல் இல்லை.

அணில் குட்டி : ஹி ஹி.. உங்க வீட்டு ஸ்பெஷல் இதுன்னு எதாது ஒன்னு உங்களுக்கு செய்யத்தெரியுமா.. எப்பவும் சும்மாவே ஓவர் பில்டப்பூஊ......

பீட்டர் தாத்ஸ் : A good cook is a certain slow poisoner, if you are not temperate”