பொதுவாக இடியாப்பம் என்பது செய்ய கஷ்டமான உணவு என்று நினைப்பார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் பெரிய கஷ்டமில்லை, செய்முறையை எளிதாக்கிக்கொள்ள வேண்டும் அவ்வளவே.. !  அடிக்கடி எங்கள் வீட்டில் காலை உணவில் இடியாப்பம் இருக்கும்.

தேவையான பொருட்கள் :  பச்சரசி கழுவிக்காயவைத்து, அரைத்த மாவு 3 கப், நன்றாக கொதித்த தண்ணீர், கொஞ்சம் உப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை.

செய்முறை : அகன்ற பாத்திரத்தில் (அ) பேசினில் மாவை க்கொட்டி, உப்பு சேர்த்து கலந்துக்கொண்டு, நன்கு கொதித்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவை கெட்டியாக கலந்துக்கொள்ளவும்.  இட்லி தட்டில், இடியாப்பம் (மர அச்சு)* அச்சுவை க்கொண்டு மாவை பிழிந்து, இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கவும். 2-3 நிமிடங்களில் வெந்துவிடும்.  பிழியும் போது அழுத்த ரொம்ப கடினமாக இருந்தால், மாவில் லேசாக நீர் தெளித்து இளகுவாக்கிக்கொண்டு பிழியலாம்.

துருவிய தேங்காய்,  சர்க்கரை தூவி பரிமாறவும்.

*மர அச்சு'வில் தான் துளைகள் சிறியதாகவும் நெருக்கமாகவும் இருக்கும். இன்டோலியம், எவர்சில்வர் அச்சுகளில் பெரிய துளைகளாக இருக்கும். அதில் இடியாப்பம் பிழிந்தால், நூடுல்ஸ் சைஸ்'சில் இருக்கும். மெல்லிய இழைகளாக  வராது. அதனால், இடியாப்பத்திற்கு மட்டும் மர அச்சு' வை பயன்படுத்தவும். 

மாவு, செய்முறை, பதம் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் பெரிய துளைகள் உள்ள அச்சுவில் செய்யும் இடியாப்பத்தின் சுவை நன்றாக இருக்காது.

அணில் குட்டி : ம்ம்ம். .வருஷத்தின் ஆரம்பமே சிக்கலா... ??? நல்லா இருங்க அம்மணி... .!

பீட்டர் தாத்ஸ் : “Food is an important part of a balanced diet.”
.