பேதை பெண்... யாரோ ஒரு ரேடியோ ஜாக்கியிடன் தன் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய கேட்கிறாள். இந்த ரேடியோ ஜாக்கி ஒன்றும் குறிப்பிட்ட துறை சார்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றி இரவு பாட்டு கேட்டுக்கொண்டு படுத்திருந்தேன்.. பாட்டுக்கு நடுநடுவே தொலைப்பேசியில் அழைத்து நம் பிரச்சனைகளை சொன்னால் அந்த ரேடியோ ஜாக்கி அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை சொல்லுவார். அப்படி கேட்கும் 10 தொலைபேசி கால்களில் 9 தொலைபேசி கால்கள் கண்டிப்பாக காதல் பிரச்சனைகளை பற்றி இருக்கும்... இவர்களும் நல்லவிதமான தீர்வுகளை சொல்லித்தருவார்கள். :) அப்படி அழைக்கும் காதலர்கள் அத்தனை பேரும் ஊடல், கூடல், மாடல் பற்றி பேசுவார்களே அன்றி நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய சிலர் நம் வீட்டில் இருக்கிறார்களே அக்கறையோடும் பாசத்தோடும் அவர்களை பற்றியும் சற்றே நினைப்போம் என்று நினைப்பாரில்லை.

இப்படி கேட்டு கொண்டு இருக்கும் போது ஒரு பெண், தன் கணவர் டவுரி அதிகம் கேட்டு தன்னை வீட்டை விட்டு துறத்திவிட்டார் என்றும் தான் இப்போது அம்மா வீட்டில் இருப்பதாகவும், அதற்கு அவர் முழு காரணம் இல்லையென்றாலும் மாமியார், நாத்தனார் சொல்லுவதை கேட்டு த்தான் அப்படி நடந்துக்கொள்கிறார்.. என்று சொல்லிவிட்டு கடைசியாக அந்த பெண் கேட்ட கேள்வி "நான் அவரோடு வாழவா?"

பேதை பெண்ணே!! இது உன் வாழ்க்கை, உன் கணவருடன் வாழ்ந்தவள் நீ, உன் மாமியார், நாத்தானார் பற்றி உனக்கு தான் தெரியும், அதை எல்லாம் விட அம்மா வீட்டு சுழ்நிலை, உன் படிப்பு, உன்னால் சுயமாக தனியாக இருக்க முடியுமா? இல்லை வேறு வாழ்க்கைக்கு நீ தயாரா? உன் பொருளாதார நிலைமை, இதை எல்லாவற்றையும் விட உன் கணவர் மேலும் உன் குடும்பத்தின் மேலும் நீ வைத்திருக்கும் அன்பு... என்று இதை எல்லாமே யோசித்து நிச்சயம் செய்ய வேண்டியது நீ.. !!

யாரோ ஒரு மூன்றாம் மனிதரிடம் ஒரு நிமிடத்தில் முடிவு செய்ய வேண்டிய விஷயமா இது?! கேட்கும் கேள்வி பைத்தியக்காரத்தனமாக இல்லையா? துறை சார்ந்தவர் என்றாலும் அலோசனை மட்டும் கேட்கலாம் ஆனால் முடிவு நம்முடையதாக மட்டுமே இருக்கவேண்டும்.

நீ அவரோடு சேர்ந்து வாழவேண்டும் என்று நினைத்துவிட்டால் போதும் நீ வாழ்ந்து விடுவாய், அல்லது வேண்டாம் என்று நீ முடிவு செய்தால் அவர் உன்னை இழந்துவிடுவார் என்பது கூட உனக்கு தெரியாதா? உன் வாழ்க்கையின் முடிவை அடுத்தவர் நிர்ணயம் செய்வதா? கணவன் மனைவிக்குள் மூன்றாவது ஒரு ஆள் நுழைந்து விட்டாளே அங்கு பிரச்சனை தான். எத்தனை பெரிய பிரச்சனை வந்தாலும் இது நம் வாழ்க்கை நாம் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். சொல்லுபவர்களுக்கு என்ன அவர்கள் பாட்டுக்கும் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் அது பாஸிட்டிவாக இருந்தாலும் நெகட்டிவாக இருந்தாலும் அனுபவித்து நாமே.

அதனால் யாருமே தன் வாழ்க்கையை தானே முடிவு செய்தல் நலம். உடனடியாக முடிவு எடுக்கும் நிலையில் நம் மனமும், சூழ்நிலையும் இல்லை என்றால் சிறிது காலம் கிடப்பில் போட்டு சிந்திக்கும் திறன் வந்த பிறகு முடிவு செய்யலாம்.. ஆனால் எக்காரணம் கொண்டும் மற்றவர் சொல்லுவதை கேட்டு நம் வாழ்க்கையை நாம் முடிவு செய்ய க்கூடாது.

அணில் குட்டி அனிதா:- கவிக்கு ஆர்.ஜே'ஸ் கண்டாலே பொறாமை.. வேற ஒன்னுமே இதுல மேட்டர் இல்ல.. ...சர்ரி என்னக்கு பசிக்குது சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா.. கூல்..லா... வெயிலுக்கு இளநீர், ஜூஸ்'ஸூ.. ஏதாச்சும்... எனி படி ஸ்பான்ஸரிங்...?!

பிட்டர் தாத்ஸ் :- Like the elephant, we are unconscious of our own strength. When it comes to understanding the power we have to make a difference in our own lives, we might as well be asleep. If you want to make your dreams come true, wake up. Wake up to your own strength. Wake up to the role you play in your own destiny. Wake up to the power you have to choose what you think, do, and say.