காலையில் எழுந்தவுடன் மொபைல்'ஐ ஆர்வமுடன் எடுத்து மெஸேஜ் ஏதாவது வந்து இருக்கிறதா என்று பார்த்தேன்.. வேற ஒன்றும் இல்லை "மகளிர் தின" வாழ்த்துக்களுக்குத்தான்.

ஒன்றும் இல்லை. எழுந்து வெளியில் வந்தால், ஹாலில் எப்போதும் போல் நியூஸ் பேப்பர் கையுமாக என்னுடைய வீட்டுக்காரர். சரி அவர் விஷ் பண்ணுவார் என்று எதிர்பார்த்தேன். கண்டுக்கொள்ளவே இல்லை.

பல் விலக்கிவிட்டு திரும்பவும் வந்து அவர் முன்னே நின்றேன்... ம்ஹீம் ஒன்றும் கிடைக்கவில்லை. சரி நாமே சொல்லி நாமே வாழ்த்துக்களை வாங்கிக்கொள்ளலாம் என்று..

"ப்பா இன்னைக்கு விமன்'ஸ் டே"

பேப்பரை விட்டு கண்ணை எடுக்காமலேயே "..ம்ம்..இப்ப அதுக்கு என்ன?.."

"................."

திரும்பவும்..கொஞ்சம் சவுண்டாக.."ப்பா இன்னைக்கு விமன்'ஸ் டே' ன்னு சொல்றேன் இல்ல.."

"அதான் காது கேட்டுச்சே.. அதுக்கு என்ன இப்ப...."..

வெட்கம் மானம் எல்லாம் பார்த்தால் சரி வராது.. "எனக்கு நீங்க விஷ் பண்ணனும்.."

மெதுவாக பேப்பரைவிட்டு என்னை பார்த்தார்... "உனக்கு எதுக்கு விஷ் பண்ணனும்.."

"....விஷ் பண்ணுங்கன்னு கேட்ட பிறகும் ஏன்?.. ன்னு கேட்கறீங்க"..

"ஆமாண்டி அது எல்லாம் விமஸ்"க்கு டீ.." நீ ஏன் விஷ் பண்ண கேக்கற..."


".............."....... ஹாஆன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...... விமன்ஸ் டே அதுவுமா என்னை காலங்காத்தால அழவச்சிட்டீங்க இல்லை......"

"சரி சரி ரொம்ப அழுவாத... ஹாப்பி வுமன்ஸ் டே.."

*****************

மெஸேஜ் ஒன்று வந்தது.. ஆஹா நிஜமாகவே நாம கேட்காம நம்மை யாரோ விஷ் பண்றாங்க..பாக்கலாம் என்று எடுத்து வாசிக்க...

"Happy Women's Day.......!! ... What special this women are going to do?!! on this day?"

இப்படி ஒரு வாழ்த்தை நான் கேட்டேனா?... அனுப்பியது வேறு யாருமில்லை அலுவலக நண்பர்.

***************

இருப்பினும் நான் கேட்காமல் என்னை நினைவில் வைத்து சிங்கபூரிலிருந்து ஒரு ப்ளாகரும்... இங்கிருந்து ஒரு ப்ளாகரும் வாழ்த்து அனுப்பி வைத்து இருந்தார்கள்.

இன்று சிபியின் வாழ்த்து கிடைத்தது. சிபி அனுப்பிய வாழ்த்து "அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் "

சும்மா இருக்க முடியுமா.. என்ன சிபி "அனைவருக்கும்" னு போட்டு அனுப்பி இருக்கீங்க.. மகளிர் தினம் மகளிர்' க்கு மட்டும் தானே என்று கேட்க...

"ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும்போது வாழ்த்துக்கள் மகளிர்க்கு மட்டுமா வேண்டும்?" இது சிபி'யின் பதில்...

இப்படித்தான் தாங்க.. மகளிர் தினமும் அதன் வாழ்த்துகளும் போச்சி.."

அணில்குட்டி அனிதா:- ம்ம்.. இதுக்கு தான் அவங்களே வாழ்த்தட்டும் னு பேசாம இருக்கனும்..கேட்டு பல்பூ வாங்கறது கவிக்கு என்ன புதுசா..?!

பீட்டர் தாத்ஸ் :- Woman is the companion of man, gifted with equal mental capacity. -GANDHI