அணில்குட்டி அனிதா:- அம்மணி எவ்வளவு சொன்னாலும் கேட்கற சாதியில்லை'ன்னு ஊரு உலகத்துக்கு தெரியும். அப்படின்னா வீட்டுல இருக்கவங்க கதிய கொஞ்சம் யோசிச்சி பாருங்க.. அய்யோ பாவம் கவிதா வூட்டுக்காரர், அம்மணிய கட்டிக்கிட்டு அவரு படற பாடு இருக்குதே. .அந்த ஆண்டவனுக்கும் பொறுக்காது... அவரு படற பாட்டை பாருங்க தெரியும்....:(

இதுல பிராக்கிட் ல இருக்கறது எல்லாம் அம்மணி மனசுல நினைக்கிறது....

மிஸ்டர் கவி:- ஏண்டி நீ திருந்தவே மாட்டியே..??

கவி: ................................ (என்னா இப்ப தப்பு பண்ணாங்க திருந்த? )

மிஸ்டர் கவி : நீ தப்பு பண்ணா மட்டும் சைல்ன்ட்டா இருப்பியே வாய தொறக்க மாட்டியே....

கவி: ........................... ... (நாங்க எல்லாம் பேச ஆரம்பிச்சா நீங்க பேசமுடியாது இல்ல அதான்........சான்ஸ் கொடுக்கிறோம் பேசுங்க.....)

மிஸ்டர் கவி: ஏண்டி உன்கிட்ட தாண்டி பேசறேன்.. திருந்தவே மாட்டியா?

கவி: ..............(புதுசா ஏதாச்சும் பிரச்சனையா..? யார் கிட்டயும் சண்டை போட்ட மாதிரியே தெரியல..யாருக்கும் ரீசண்டா எந்த ஹெல்பும் செய்த மாதிரியும் தெரியில.. ஏன் அநாவசியமா நம்மள திருந்த சொல்றாரு இவரு....)புள்ள இருக்க பக்கமா திரும்பி.. கண்ணாலேயே "என்னடா மேட்டர்?"..

புள்ள :- :)))))))))))))) மாட்டினியா.... எவ்வளவு மாட்டினாலும் நீ திருந்தமாட்ட. .அனுபவி.....

மிஸ்டர் கவி :- பாரு அவன் கூட திட்டறான்...ஏண்டி எப்படிடி ஒன்னுமே தெரியாத மாதிரியே உட்கார்ந்து இருக்க...

கவி :- ..................... (அடடா மேட்டரை சொல்லாம இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா எப்படி..கொஞ்சமாச்சம் எதிராளி கஷ்டம் தெரியுதா பாத்தியா இவருக்கு..... )

மிஸ்டர் கவி : ஏண்டி உனக்கு எப்பத்தான் மெச்சூரிட்டி வரும்?

கவி: .................... (எனக்கு வந்துட்டா.. நீங்க இப்படி கேள்வி கேட்க முடியாது இல்ல அதான்.......அவ்வ்வ்வ்வ்வ் மேட்டர சொல்லுங்கப்பா..... )

மிஸ்டர் கவி :- நீயே இப்படி இருந்தா நம்ம பையனுக்கு யாரு சொல்லிதருவா?

கவி:
...................... (உங்களுக்கு இப்படி பேச வாய்ப்பு கொடுக்கறது பெரிய விஷயம்.. அதை பயன்படுத்தி நீங்க எவ்வளவு பேசறீங்க.. அவனுக்கும் அப்படி நானு வாய்ப்பு கொடுப்பேன்..)

கவி அவர் பேச பேச... டிவி'ஐ ஆன் பண்ணி காமெடி டைம் பார்க்க... அதில் கைப்பு (வடிவேலு) வை எல்லாரும் சேர்ந்து அடித்து நொறுக்க..

மிஸ்டர் கவி :- ஏண்டி நான் பாட்டுக்கும் இங்க கத்திக்கிட்டு இருக்கேன்... நீ என்ன அங்க டீவி ய பாத்து இளிக்கற....

கவி :--...............:) ஹ் அஹஹா.. ஹ....ப்பா. இங்க கொஞ்சம் பாருங்களேன்.... இவனோட எப்பவும் இதே காமேடிப்பா... எவ்வளவு அடிவாங்கினாலும் திருந்தாம திருப்பி திருப்பி அடிவாங்கறான்...எத்தன வாட்டி பார்த்தாலும் சிரிப்பு சிரிப்பா வருது..........இங்க பாருங்களேன்.... ஹா ஹா...:)

மிஸ்டர் கவி..: அடச்சீ... தூஉ.... . உன்கிட்ட பேசறதே வேஸ்டுடி..

கவி:(இத தானே ரொம்ப நேரமா நாங்க சொல்றோம்...அப்புறம் எதுக்கு தேவ இல்லாம பேசிக்கிட்டு..... ஏதோ பேச சான்ஸ் கிடைச்சா போதுமே.....)ஓ நீங்க சீரியஸா இருக்கீங்க இல்ல...சாரி......எஸ்..ப்பா.. சொல்லுங்க.. வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம்..?

மிஸ்டர் கவி
: ம்ம்...வெங்காயம்.. !!

கவி:............... ஹான்..!! நான் வாங்க சொல்லவே இல்லையே....

மிஸ்டர் கவி: ஏண்டி அறிவில்ல ஒனக்கு ஊர் ல யார் எப்படி போனா உனக்கு என்ன...? ஏண்டி ஓவரா போயி உதவி பண்றேன்னு பிரசன்னைய வீட்டு வரைக்கும் கொண்டு வர...

கவி:- .............. (ஓ இன்னும் மேட்டர் முடியலையா... என்ன பிரச்சனை..ஒரே மர்மமாவே இருக்கே....)

மிஸ்டர் கவி: ஒன்னத்தாண்டி கேக்கறேன்...

கவி...: ................. (அடாடா மேட்டர் என்னான்னு தெரியாம என்னத்த பேச...யார் போட்டு கொடுத்து இருப்பா....?! இவருக்கு ஒன்னும் தெரியாம இல்ல மெயின்டெயின் பன்ணிக்கிட்டு இருக்கோம்..ஏன் இப்படி..?!! )

மிஸ்டர் கவி :- எப்படியும் நீ திருந்த போறது இல்ல செய்யறதுக்கு முன்ன சொல்லிட்டு செய்யேண்டி.. ஏண்டி எல்லாத்தையும் மறச்சிட்டு கடைசி நிமிஷம் உயிர வாங்கற..

கவி :- ஹல்லோ ஹோல்ட்.. ஹோல்ட்... என்ன சொல்லனும்.. இப்ப நீங்க என்னை சொல்லிட்டா திட்டறீங்க.? நான் பொறுமையா கேட்டுக்கல.. நான் மட்டும் ஏன் சொல்லிட்டு செய்யனும்?? (எஸ் கவி !! குட் கொஸ்ஸின்.. எப்படி கவி இப்படி எல்லாம்?!! )

மிஸ்டர் கவி :- டேய் இவ க்கூட என்னால முடியலடா.... ஏண்டா இவ இப்படி இருக்கா?

கவி :- (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா எப்படியோ மேட்டரை புள்ள பக்கம் திருப்பியாச்சி இனிமே அவன் பாத்துக்குவான்... )

புள்ள :- ம்மா......... ஏன்ம்மா...?!! .....?!!!