மேலாளர் - இவர் எப்படி இருக்கவேண்டும், எப்படி தன்னை ஒரு நல்ல மேலாளராக உருவாக்கிக்கொள்வது, தன்னுடன் பணி புரியும் ஆட்களை எப்படி வேலைவாங்குவது, நடத்துவது, தன்னை மேலும் எப்படி ஒரு நல்ல மேலாளராக மெருகேற்றிக்கொள்வது என்பதை ப்பற்றி நிறைய புத்தங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்த்திருக்கிறேன்.. இதை எல்லாம் படித்தா ஒரு மேலாளர் உருவாகிறார் அல்லது தன் பதவிக்கான தகுதியை மேம்படுத்திக் கொள்கிறார் அல்லது கொள்ளமுடியும். புத்தகங்கள் படித்து அதை நடை முறையில் செயற்படுத்துபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். குறிப்பாக நம் பதிவியில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை படித்து நடந்து க்கொள்வது என்பது ப்ராக்டிகலாக சாத்தியமா என்று தெரியவில்லை. என் மேலாளர்களையும், உயர் அதிகாரிகளையும் கவனித்ததன் மூலம் சில நல்ல விஷயங்களை கற்று க்கொண்டு இருக்கிறேன். அதில் ஏதாவது உங்களுக்கும் உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

ப்ளாகரில் நிறைய பதிவர்கள் மேனேஜரை டேமேஜர் என்றே சொல்லி பார்க்கிறேன். அத்தனை எரிச்சலும் கோபமும் தன்னுடைய மேலாளர்கள் மீது இருக்கிறது என்பதை உணர முடிகிறது. விளையாட்டாக சொன்னாலும் நிஜத்தில் மேனேஜர்கள் எப்போதும் அதிகாரத்தோடும், தன்னுடன் வேலை செய்பவரகளை அடிமைகள் போலவும், தன் சொந்த வேலையை செய்ய வைப்பவர்களாகவும், தனக்கு சாதகமாக பேசுவர்களுக்கு மட்டும் அவர்கள் சாதகமாகவும் இருக்கிறார்களா? நிறைய ஆம்’ என்றே பதில்கள் வரும்.

குறைந்த காலத்திலும், எல்லோராலும் சிறந்த மேல் அதிகாரி என பெயர் பெற்றவர்களிடமும் உள்ள பொதுவான சில குணாதிசியங்களை கொண்டு வர முயற்சி செய்து இருக்கிறேன்:-

1. நேரம் தவறாமை
2. முன்கூட்டியே தன் வேலையையும், பிறரின் வேலையும் திட்டமிடுதல்
3. திட்டமிட்ட படி செயற்படுத்துதல்
4. செயற்படுத்தியதை சரியா தவறா என்று பகுத்து பார்த்தல், தவறிருப்பின் அதை அடுத்தமுறை சரியாக செய்ய முனைதல்.
5. நேரத்திற்கும், சமயத்திற்கும் தகுந்தார் போன்று முடிவெடுக்கும் திறன்
6. வேகம், நல்லதானாலும் கெட்டதானலும் சீக்கிரம் முடிவெடுக்கும் திறன்
7. வேலையில் எப்போதும் ஒரு வேகம் (Aggressiveness) ஆனால் அதே சமயம் அமைதி(Peace) யுடன் பழகுதல் – (Aggressive and Peace )
8. தன்னுடன் வேலை செய்பவரகளையும், அவர்களின் குடும்பத்தை பற்றியும் சிரத்தையாக விசாரித்தல்.
9. அலுவலக நேரத்திற்கு அப்பால், அவர்களோ, அவர்களுடன் வேலை பார்ப்பவர்களோ வேலை செய்யாமல் பார்த்துக்கொள்ளுதல்
10. தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு தரமான தேர்ச்சி கொடுத்தல்
11. தன்னுடன் வேலை செய்பவர்களை சமமாக நடத்துதல்
12. தானும் அவர்களில் ஒருவராக எந்த வித இடைவெளியும் இல்லாமல் பழகுதல்.
13. தன்னுடன் வேலை செய்பவர்கள் பிரச்சனைகள் என்று வரும் போது பொறுமையுடனும் அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிதல்
14. நேரத்திற்கும், சமயத்திற்கும் தகுந்தார் போன்று அவர்களுக்கு அறிவுரை செய்தல்
15. எல்லாவற்றிருக்கும் மேல் உழைப்பு உழைப்பு உழைப்பு
16. தன் வேலையை தவிர (department) மற்ற இடங்களில் மூக்கை நுழைக்காமல் இருத்தல்.

மேற்கூறிய எதுவுமே ஒருவரிடம் மட்டும் நான் பார்க்கவில்லை. என் மேல் அதிகாரிகளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கவனித்து என் வேலை தரத்தை உயர்த்த கற்றுக்கொண்ட, இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கின்ற பாடங்கள் என கொள்ளலாம். போல்ட் செய்யப்பட்டவை பொதுவாக எல்லோரிடமும் பார்த்த விஷயங்கள்

என்னுடைய மேல் அதிகாரிகள் சிலர் :

திரு.ஷபீர் பாய் (bhai) : நான் முதல் முதலில் வேலைக்கு போன லெதர் கம்பெனியுன் மேனேஜர். 4000 ஆட்களை மட்டும் அல்ல அனனத்து அலுவலக வேலையும் ஒருவராக கவனித்துவந்தவர். இவரிடம் உள்ள அசாத்திய வேகம், துணிவு, முடிவெடிக்கும் திறன் பார்த்து நான் அசந்து போன மனிதர்களில் ஒருவர். இவருக்கு ஆங்கிலமும், கம்பியூட்டரும் தெரியாது என்பது குறிப்பிட தக்கது. எங்களை தான் இந்த இரண்டுக்கும் நம்பு இருப்பார்.

திரு.கார்த்திக் பட்டேல் & திரு.சஞ்சய் பாரிக் :- அகமதாபாத்’ நகரில் என்னுடைய Directors. கார்த்திக் – மிக வேகம், துரு துருவென்று இருப்பார், சரி/தவறு எதுவானாலும் தடாலென முடிவெடுக்கும் வேகம் இவருடையது. ஆனால் சஞ்சய் அதற்கு நேர்மாறாக இருப்பார் அமைதிக்கு மறு பெயர். சஞ்சயிடம் என்னுடைய வேலையில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். ஹை ப்ரஷரில் கூட எப்படி பொறுமையாக, தவறில்லாமல் ஒரு வேலையை செய்ய முடியும் என்பதை சொல்லிக்கொடுத்தவர்.

திரு.கனேஷ் : சென்னையில் தனியார் கம்பெனியின் director. டைம் பக்சுவல் என்றால் இவர் தான்.. 9 மணிக்கு அலுவலகம் திறந்தாலும் திறக்காவிட்டாலும் வந்து நிற்பார், சில நேரங்களில் திறப்பவர் வருவதற்கு நேரம் ஆகிறது என்று என்பதால் தானே ஒரு சாவியும் வைத்து இருப்பார், தானே திறந்து வந்துவிடுவார். இவர் தான் இந்த வேலையை செய்யவேண்டும் என்ற பார்வை இவரிடம் இருந்தது இல்லை.

என் கணவர் :- நேரத்திற்கு அலுவலகம் செல்வது, அவரின் டீம்’யாரையும் அலுவலக நேரத்திற்கு மேல் அதிக நேரம் வேலை செய்யவிடாமால் பார்த்துக்கொள்வது. விடுமுறை நாட்களில் அவர்களை அதிக வேலை இருந்தாலும் வர சொல்லாமல் இருப்பது. (ஆனால் இவர் தனியே போய் செய்துவிட்டு வருவார். :))

திரு.நாதன் (கனடா) : எப்படி தன்னுடன் இருக்கும் சக ஊழியர்களை மரியாதையுடன் நடத்துவது, அடுத்தவருக்கு தொந்தரவு இல்லாமல் சத்தமே இல்லாமல் ஊழியர்களிடம் எப்படி பேசுவது, எந்த வேலை யார் செய்து முடித்தாலும் உடனே சிரித்த முகத்துடன் நன்றி சொல்லுவது, முக்கியமாக உடல் மொழியை கொண்டே ஊழியர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும் புரிந்து க்கொள்வது.

மிஸ்.ராஜலட்சுமி : STPI, Director,Chennai. இவர்களிடம் கற்றுக்கொண்டது perfection, cleanliness, அன்பு, பெண்களிடம் தனிகவனம் (ofcourse as a female she supported us more), எல்லாவற்றிலும் தனிகவனம் எடுத்து வேலையை முடிப்பது, இவருக்கும் சத்தம் போட்டு பேசுதல் பிடிக்காது, எங்கள் அனைவரையும் “my colleagues” என்றே அறிமுகப்படுத்துவார். என் கவிதைக்காக என் பிறந்தநாளைக்கு எனக்காக ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதிக்கொடுத்தார். :) என்பது என்னால் மறக்கமுடியாதது. :)

Negative ஆக எதையும் சொல்லவேண்டாம் என டேமேஜர்'கள் பற்றி எழுதவில்லை.

அணில் குட்டி அனிதா:- அம்மணி.. .. சொல்லிட்டாங்கப்பா .எல்லாரும் கடைபிடிங்க.. பகல்'லியே தூக்கம் வருதே…!! கவிக்கு மட்டும் ஏன் இது புரியலவே மாட்டேங்குது.....!! சே !! :(

பீட்டர் தாத்ஸ் :- A good manager is a man who isn't worried about his own career but rather the careers of those who work for him.