நான் குழந்தையா இருக்கச்சே!! சே!! சே!! ... குழந்தை எல்லாம் இல்லைங்க.. இப்பவும் நான் ரசித்து பார்க்கும் கார்டூன்.. பாட்டு சேனல் இல்லை என்றால் கார்டூன் தான் அதிகம் பார்ப்பது. சீரியல் எல்லாம் பார்த்தால் நான் டென்ஷன் ஆகறது அதிகம்.. எதுக்கு நம்மை பற்றி தெரிந்தே அதை வேறு பார்ப்பது.

எனக்கு பிடித்த சில கார்டூன் கதாபாத்திரங்கள் :-

1. HEIDI :-
என்னை இந்த குழந்தையாக நான் கற்பனை செய்து கொண்டே பார்ப்பேன்.. என்னுடைய விளையாட்டையும், ஆசையையும் நிறையநிறைய இடங்களில் இந்த குழந்தையின் ஆசையோடும் விளையாட்டு களுடனும் ஒத்துப்போகும். அதனாலேயே இது ரொம்ப பிடிக்கும்.

2. DONALD DUCK :- இவரை சொல்லவே வேண்டாம் ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். குறிப்பாக இவரோட "கர கர"குரல் ரொம்ப பிடிக்கும்.. அவரோட நடை.. டான்ஸ்.. சொல்லிக்கிட்டே.. போகலாம்..

3. PINGU :- இதை சொல்லும் போதெ சந்தோஷமா இருக்கு :) சூப்பரா இருக்கும்.. இந்த பிங்கு செய்யற லூட்டியும் அது பனியில சருக்கறது, தூங்கறது, அதோட வீடு... அது பனிக்கட்டிய உருட்டி அடிச்சி விளையாடறது..

4. ROAD RUNNER :- இதை பார்த்து எனக்கு இன்னும் கொஞ்சம் வேகமாக இதை போலவே வண்டி ஓட்ட ஆசை வரும். இதுல வர உல்ஃப் சூப்பரா பல்பூ வாங்கும்..... எப்படின்ன்னே... தெரியாது ஒரு தரமாவது ஜெயிக்காதுன்னு நான் எதிர்

பார்த்துக்கிட்டே இருப்பேன்.. ம்ஹீம் எங்க இன்னைய வரைக்கும் இல்ல..

Kind Attn to All Kutty's Amma's: நீங்க உங்க பாப்பா'க்கு சிடி வாங்கும் போது HEIDI சிடி கண்ணில் பட்டால் எனக்கு வாங்கி த்தரவும். ப்ளீஸ்

அணில் குட்டி அனிதா:- ம்ம்..ஆமா.. பீப்பா ஆவா ஆனா பிறகும் பாப்பா'ங்க பாக்கற சிடி ய கேக்குறாங்க பாரு... ஹய்யோ..ஹய்யோ..!! கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடுமை ச்சிங்கு ச்சிங்குன்னு ஆடுச்சாம்... ஆடறது யாரு.. அந்த கொடுமை யாருன்னு...நான் வேற சொல்லனும்மா... :(

பீட்டர் தாத்ஸ் : All cartoon characters and fables must be exaggeration, caricatures. It is the very nature of fantasy and fable.